மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையாரின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு தென்திருப்பேரை அருகே உள்ள குரங்கணியில் மின்னல் விளையாட்டு கழகம் சார்பில் கைப்பந்து போட்டி நடந்தது.
இந்த போட்டியில் 30 அணியினர் கலந்து கொண்டனர். முதல் பரிசு வென்ற தூத்துக்குடி அணிக்கு ரூபாய் 10 ஆயிரத்தை ஏரல் பேரூராட்சி திமுக 4வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி வழங்கினார். முதல் பரிசுக்கான வெற்றி கோப்பையை குரங்கணியைச் சேர்ந்த கேசவமூர்த்தி வழங்கினார். இரண்டாவது பரிசை வென்ற அணியினர் சிங்கை அணிகூடன்குளம் அணிக்கு ரூபாய் 8 ஆயிரத்தை சமூக ஆர்வலர் சிவகுரு வழங்கினார். அவர்களுக்கான வெற்றி கோப்பையை முத்துக்குமார் தனுஷ் வழங்கினார். மூன்றாவது பரிசை வென்ற முதலூர் அணிக்கு ரூபாய் 5 ஆயிரத்தை வழங்கியவர் எஸ்.ஆர்.எஸ் மொபைல் உரிமையாளர் தினேஷ் வழங்கினார். கோப்பையை அதிமுக தூத்துக்குடி மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் குணசேகரன் வழங்கினார்.
சிறந்த ஆட்டக்காரருக்கான கோப்பையை செல்வ முத்துராமன் வழங்கினார். முத்துமாலை அம்மன் வேஸ்ட் பேப்பர் ஸ்டோர் முத்துகிருஷ்ணன், நிறுவன தலைவர் நாடார் மஹாஜன பேரவை பள்ளங்கிணறு ஜெகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சங்கர், பெரியசாமி, அருண் பால்ராஜ் மற்றும் நாடார் மஹாஜன பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் ஆனந்த கிதியோன் நாடார் மற்றும் குரங்கணி இளைஞர்கள் அமல்ராஜ் சாலமோன் சந்துரு போஸ், பிரதீஷ்குமார், பாலமுருகன், பாலசுப்ரமணியன், முத்துராமன், சுந்தர், தினேஷ், சரவணன், சிவசுந்தர், ரமணன், கண்ணன், முத்து, சரவணகுமார், பிரவீன்ராஜ், செல்வம், முத்து குட்டி, ராஜா, சஞ்சய், முத்து, மாலை குமரன், பெரியசாமி உள்பட பலர் செய்திருந்தனர்.


