வல்லநாட்டில் ஹெக்சகான் நியூட்ரிசன் நிறுவனம் சார்பில் காசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க உயர்ரக புரோட்டீன் பவுடர் வழங்குதல்
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் ஹெக்சகான் நியூட்ரிசன் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் சார்பில் காச நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க உயர்ரக புரோட்டீன் பவுடர் வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முதுநிலை உதவி மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜோசுவா பிரவுண் தலைமை தாங்கினார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.செல்வகுமார் முன்னிலை வகித்தார்கள்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்புரை ஆற்றினார்.
காசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதற்காக உயர் ரக புரோட்டீன் பவுடரை ஹெக்சகான் நியூட்ரிசன் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள மேலாளர் பா.சிவராஜ் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை பணியாளர் வேம்பன், ஹெக்சகான் சிவலிங்கம், சுகாதாரத் துறை பணியாளர்கள் காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் ஹெக்சகான் நியூட்ரிஷன் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


