தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளுடன் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது. எங்கு நோக்கிலும் ஆற்றுமணல் கொள்ளை, கனிமவள கடத்தல் நடக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. சாலைகள் சேதம் அடைகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆலந்தா, உலக்குடி, விளாத்திகுளம் பகுதிகள் கல்குவாரிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய மாசை விட இது அதிகம். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறிதது 2026ல் முடிவு செய்வோம். இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசன உரிமை. எந்த வாக்குறுதியை கூறி திமுக ஆட்சிக்கு வந்ததோ அதனை நிறைவேற்றவில்லை என்றார்.


