முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தை உத்திர வருஷாபிஷேகம் விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, நடந்தது. அதைத் தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது.
ஒவ்வொரு வருடமும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இரண்டு முறை வருசாபிசேகம் நடைபெறுவது வழக்கம். ஒன்று ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று வரக்கூடிய ஆனி வருஷாபிஷேகம்.
இன்னொன்று தை மாதத்தில் உத்திர வரக்கூடிய தை உத்திர வருஷாபிஷேகம் ஆகும். இன்று தை உத்திர வருஷாபிஷேகம் விழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடந்தது.
கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து, குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு மேளதாலங்கள் முழங்க கொண்டுவரப்பட்டு சரியாக காலை 8.15 மணிக்கு மூலவர், விமான கலசதிற்கு புனித நீர் ஊற்ற பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சண்முகர் விமான கலசத்திற்கு, பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடந்தது.
அதாவது மூலவர், வள்ளி, தெய்வானை ஆகிய சந்நிதிகளின் விமானங்களுக்கு போத்திமார்கள் மூலமும், சுவாமி சண்முகர் விமானத்துக்கு சிவாச்சாரியார்கள் மூலமும், வெங்கடாஜலபதி சந்நிதி விமானத்துக்கு பட்டாச்சாரியார்கள் மூலமும் புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடந்தது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க இருக்கிறார்.
இந்த தை உத்திர வருஷாபிஷேகம் காண்பதற்காக திருச்செந்தூர் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மற்றும் பச்சை நிற வேட்டி அணிந்த பக்தர்கள் ஏராளமானோர் இந்த வருஷபிசேக நிகழ்ச்சியில் பலரும் அதிகாலை முதலே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்து முருகனை வழிபட்டு வருகின்றனர்.


