ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் திருவேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.
நவதிருப்பதிகளில் 9வது திருப்பதியாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் மூலவர் ஆதி நாதர் தாயார்கள் ஆதிநாதவல்லி குருகூர்வல்லி இத்திருத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் அவதாரம் செய்தார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திவ்ய தேசத்தில் மார்கழி திருஅத்யன உத்சவம் (பகல் பத்து ராப் பத்து கடந்த 31.12.2024 அன்று துவங்கி 21 தினங்களாக நடந்து வருகிறது. காலையிலும் மாலையிலும் உற்சவர் பொலிந்து நின்ற பிரான் மற்றும் சுவாமி நம்மாழ்வார் ஆகியோருக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பிரபந்தம் பாராயணம் நடைபெறுகிறது. ராப்பத்து உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக 8ம் திருநாள் அன்று திருவேடுபறி வைபவம் கோயில் வடக்கு மாடவீதியில் நடந்தது.
இதற்காக சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஒரு கையில் தங்க கவசம் ஒரு கையில் சாட்டை தலையில் கொண்டை மார்பில் காசுமாலை செண்பக மாலை கல் பதித்த ஆபரணம் மலர் மாலைகள் அணிந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். திருமங்கை ஆழ்வார் கைகூப்பிய நிலையில் தோளுக்கினியானில் எழுந்தருளினார். மாட வீதிகளில் வலம் வந்த சுவாமி மற்றும் திரு மங்கை ஆழ்வார் ஓடிவர நிற்க என் கள்வர்க்கு பயந்தது போல திருவிளையாடல் நடைபெற்றது.
திருமாலுக்கு தொண்டு செய்தே தன் செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன் சுவாமிக்கு தொடர்ந்து கைங்கரியம் செய்ய நினைத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டனர். இவரை ஆட்கொள்ள விரும்பிய சுவாமி தம்பதி சமேதராக வழி போக்கனாக வந்து தன் செல்வத்தை பறிகொடுக்கும் வேடுபறி நிகழ்ச்சி நடந்தது.
கோயிலில் எழுந்தருளிய சுவாமிக்கு மற்றும் ஆழ்வார்க்கு ஆழ்வார்திருநகரி ஜீயர் சுவாமிகள் திருவாய்மொழிபிள்ளை சுவாமிகள் மற்றும் பிரபந்த கோஷ்டியினர் சிறிய திரு மடல் பாடிய படி கோயிலின் உள் அறைக்கு அழைத்து சென்றனர். இந்த நாளின் சிறப்பு பூஜை தேவர் சமுதாயம் மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்ப்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கனேசன் மற்றும் உறுப்பினர்கள் உட்பட செயல் அலுவலர் சதிஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


