தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 88வது நினைவு தினத்தை முன்னிட்டு பழைய மாநகராட்சியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவர், தூத்துக்குடியில் வ.உ சிதம்பரனார் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி வர்த்தக காங்கிரஸ், தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், வடக்கு மண்டல தலைவர் சேகர், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், டிசிடியூ மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி , மாநகரச் செயலாளர் கோபால், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், எஸ்சி/எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பிரதீப் தினகரன், ஸ்சி/எஸ்டி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


