தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 87வது நினைவு நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் மாரியப்பன், மாமன்ற உறுப்பினர் பொன்னப்பன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


