தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு, டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் கீழப்பூவாணியில் வைத்து நடைபெற்றது.
முகாமினை சிங்கத்தாகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் பே.புவனேஸ்வரி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்கள்.
மாவட்ட காசநோய் மைய நலக்கல்வியாளர் முத்துக்குமார்
முன்னிலை வகித்தார்கள்.
முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர்ச.இசக்கி மஹாராஜன் வரவேற்று பேசினார்.
டி.வி.எஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் கி.யோ.பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இம்முகாமில் 42 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 30 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார்.
இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் ச.கிருஷ்டி, கண் மருத்துவ உதவியாளர் தி.முத்துலக்ஷ்மி, சுகாதார பார்வையாளர் ந.முத்து லட்சுமி, இடைநிலை சுகாதார செவிலியர் ரா.மாரியம்மாள், சுகாதார தன்னார்வலர் ச.மகேஸ்வரி, டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் கணேசன், வேளாண்மை அலுவலர் சிவ பிரசாத் மிஷ்ரா, முத்துவேல் சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


