எட்டயபுரம் பகுதியில், கூட்டுறவு ரேஷன் கடைகளில், பறக்கும் படையினர் ஆய்வு செய்து ரூ.13,752 அபராதம் விதித்தனர்.
தூத்துக்குடி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் தலைமையில், துணைப் பதிவாளர், 21 கூட்டுறவு சார் பதிவாளர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படை ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, எட்டயபுரம் வட்டத்துக்குள்பட்ட 76 கூட்டுறவுத் துறை ரேஷன் கடைகளில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.
கடை விற்பனையாளர்களுக்கு இருப்பு குறைவிற்காக ரூ. 11,952, கூடுதலாக கண்டறியப்பட்ட பொருள்களுக்காக ரூ.800, முறையான பராமரிப்பின்மைக்காக ரூ.1,000 என மொத்தம் ரூ. 13,752 அபராதம் விதிக்கப்பட்டது.


