நாசரேத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அரிவாள் காட்டி மிரட்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்-அம்பாள் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சற்குணமுத்து (40), வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்த மருதநாயகம் மகன் சித்திரைச் செல்வன் ஆகிய 2 பேரும் நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த நாசரேத் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்தனர்.


