தமிழகத்தில் அடுத்த 7 நட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி பகுதிகளில் மாலை 4மணி முதல் லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தனிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக செய்துங்கநல்லூர், கருங்குளம், முத்தாலங்குறிச்சி, தாதன்குளம் போன்ற பல்வேறு கிராமப்புறங்களிலும் மழை பெய்தது. இது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது


