தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 3 ந்தேதி புத்தக கண்காட்சி தொடங்க விருக்கிறது. கடந்த முறை முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி செந்தில்ராஜ் அவர்கள் தலைமையில் புத்தக கண்காட்சியை நெய்தல் விழாவோடு மிகச்சிறப்பாக நடத்தி வெற்றி பெற்றோம். அதற்கு நமது தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பெருமக்கள், வணக்கத்துக்குரிய மேயர் ஆகியோர் உதவியாக இருந்து வெற்றி பெற வைத்தார்கள். இந்த ஆண்டும் ஆட்சியர் இளம் பகவத் அவர்கள் பல முன்னெடுப்புகளை மிகச்சிறப்பாக செய்து வருகிறார்கள். இது உள்ளூர் எழுத்தாளர்கள் மத்தியில் மிகவும் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வாங்க உண்டியல் திட்டம், புத்தக கண்காட்சி கமிட்டியில் உள்ளூர் எழுத்தாளர்கள் அதிக பேரை சேர்த்துக்கொண்டு செயல் பட வைத்தல், தூத்துக்குடி மாவட்ட நூற்றாண்டு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்தல், புதிய எழுத்தாளர்களை அறிமுகம்செய்தல், அனைவருக்கும் வாசிப்பு திறனை ஊக்குவித்தல், புத்தககண்காட்சி மலரை தொகுத்தல் என மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்துக்கு இந்த செயல்பாடு எல்லாம் புதியதாகும். ஆனாலும் எழுத்தாளர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய செயல்பாடு மூலமாக இந்த வருட புத்தக கண்காட்சி சிறப்பான இடத்தினை பெறப்போகிறது. புத்தக கண்காட்சிக்கு உறுதுணையாக இருக்கும் நமது தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பெருமக்கள், வணக்கத்துக்குரிய மேயர் ஆகியோருக்கும் நன்றி.
மிகச்சிறப்பாக செயல்படும் இந்த புத்தக கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து, சிறப்பாக செயல்படுவோம். ஆட்சியரின் முயற்சிகள் வெற்றி பெற அவரோடு பயணிப்போம் – முத்தாலங்குறிச்சி காமராசு மற்றும் தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்கள்.


