தூத்துக்குடியில் சாலையோர மணல் திட்டுக்களை அகற்றும் பணிகளை மேயர் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பழைய துறைமுகம் வரை செல்லும் தமிழ் சாலையின் இருபுறமும் தேங்கியுள்ள மணல் திட்டுகள் மற்றும் கற்களை அகற்றும் பணியினை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் முத்துவேல், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்


