காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தக்கலையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியின் சிறப்பு நிகழ்வாக முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “களரி அடிமுறை” என்ற நூலின் குமரி மாவட்ட வெளியீடு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் த. மனோதங்கராஜ் நூலை வெளியிட்டு களரி குறித்து சிறப்புரை வழங்கினார்.
இந்த விழாவிற்கு வழக்கறிஞர் எஸ். இராஜகோபால் தலைமை தாங்கினார் . கிறிஸ்துதாஸ் ஆசான் முன்னிலை வகித்தார். சிவனி சதீஷ் அனைவரையும் வரவேற்றார்.
அமெரிக்காவில் இயங்கிவரும் களரி அடிமுறை உலக கூட்டமைப்பின் நிறுவனர் முனைவர் ரமேஷ் ரத்தினகுமார், மற்றும் அந்த அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் நூல் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினார்கள்.
எழுத்தாளர் சரலூர் ஜெகன் வாழ்த்துரை வழங்கினார். நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு ஏற்புரை வழங்கினார். சமூக ஆர்வலர் கிரிஜா மணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்,
சமூக சேவகர் தக்கலை சந்திரன், அரிமா சங்கர் தலைவர் ஒய். எஸ் லெனின் , வழக்கறிஞர் எஸ்.சிவகுமார் , முனைவர் டால்பின் ராஜா, ஒய்.வி.வர்க்கீஸ், விபின் அலெக்ஸ், ஆசான்களான பிரதீப், பால் பேக்கர் ராஜா சிங், சங்கர், ஜெய கர்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் கோ. மது நன்றி கூறினார் . இந்த நிகழ்ச்சியை இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள்.


