தூத்துக்குடியில் கேரள வியாபாரிகளின் வருகையால் மீன்களின் விலை உயா்ந்துள்ளது. இதனால மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம், கடந்த ஏப். 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் அமல்படுத்தப்பட்டது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், வேம்பாா், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள சுமாா் 545 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த காலங்களில் மீனவா்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனா். இந்த தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து, மீனவா்கள் கடந்த 15ஆம்தேதி கடலுக்குச் செல்ல தயாராக இருந்தனா்.
ஆனால், புயல் எச்சரிக்கை காரணமாக 15ஆம் தேதி மீனவா்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என மீன்வளத்துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமாா் 250-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். மீன்பிடித்து விட்டு இரவு சுமாா் 8 மணி முதல் கரைக்கு திரும்பி வரத் தொடங்கினா். சுமாா் 2 மாதங்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவா்களின் வலையில் பல்வேறு வகையான மீன்கள் அதிகளவு கிடைத்தன.
பிடிக்கப்பட்ட மீன்கள் அனைத்தும் ன் ஏலக்கூடத்தில் வைத்து ஏலம் விடப்பட்டன. இதில், சீலா மீன் கிலோ ரூ.1300, விளா மீன் கிலோ ரூ. 600, ஊளி மீன் கிலோ ரூ.650, பாறை மீன் கிலோ ரூ.700, சாளை மீன் ஒரு கூடை ரூ.3 ஆயிரம், நண்டு கிலோ ரூ. 350 என விற்பனையானது. இதுகுறித்து மீனவா்கள் கூறுகையில், மீன்பிடி தடைக்காலம் காரணமாக கேரள விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க கடந்த 10ஆம் தேதி முதல் கடலுக்கு செல்லவில்லை. மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
எனவே, கேரளம், கன்னியாகுமரி பகுதி வியாபாரிகள் மீன்கள் வாங்குவதற்காக தூத்துக்குடி வந்துள்ளதால், மீன்களின் விலை அதிகரித்துள்ளது என்றனா். மீன்பிடி தடைக்காலம் முடிந்து விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்ால் மீன் விலை குறையும் என பொதுமக்கள் எண்ணியிருந்த நேரத்தில் கேரள வியாபாரிகளின் வருகையால் மீன்கள் விலை உயா்ந்துள்ளது. இதனால், மீனவா்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனா்.


