உலக உயர் ரத்த அழுத்த தினம் மே 17 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது இதையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் ரத்த அழுத்த பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உத்தரவிட்டிருந்தார்
இதையொட்டி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தலைமையில் நடை பயிற்சி மேற் கொள்ளப்பட்டது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன் மருத்துவ அலுவலர் கரிஷ்மா முன்னிலை வகித்தனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வல்லநாட்டில் இருந்து கிள்ளிகுளம் வேளாண்மை பல்கலைக்கழகம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது
இதையடுத்து மியாகான் பள்ளி பஸ் நிறுத்தம் மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன் பொது மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது இதையடுத்து கருங்குளம் வட்டாரத்தில் பல மருத்துவ குழுக்கள் அமைத்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு ஊழியர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு உயர் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது
அனைவரும் நலமோடு வாழ்வதற்கு இயற்கையான வழிகளை பின்பற்ற வேண்டும் என்றும் நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
இதில் இயன்முறை மருத்துவர் செந்தில் வல்லநாடு வட்டார சுகாதார ஆய்வாளர்கள் சாகிர் ஜெபஸ்டின் ஜான் அகின் அரிராம் ஆகாஷ் நிதிஷ் சங்கர் முத்துக்குமார் சீனிவாசன் சர்பின் ஆக்ஸ்லின் பிரசாத் அணிஷ் அஸ்லின் அஸ்வின் செவிலியர்கள் சுதா டாரதி மருத்துவமனை பணியாளர் அழகம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .


