திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாற்றுத்துறை பயிலும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இன்று தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகிலுள்ள நாணல்காடு கிராமத்தில் உள்ள திருக்கண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுக்கள் படி எடுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இப்பயிற்சியினை துவங்கி வைத்த நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி கல்வெட்டுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இப்பயிற்சியில் மதுரை மாவட்ட காப்பாட்சியர் முனைவர் மருதுபாண்டியன், தமிழக கல்வெட்டுக்களை பற்றி விளக்க உரை நிகழ்த்தினார். மேலும் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் முறைகள் பற்றி கல்வெட்டு ஆய்வாளர்கள் உதயகுமார் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் ஜான்ஸ் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் ஆண்ட்ரூஸ் மற்றும் பேராசிரியர்கள் ஜோசப், எட்வாட் தேவதாஸ், ஸ்டெல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.