திருவைகுண்டம் சிவாஜி மன்றம் கூட்டம் சந்தையடித்தெரு காமராசு இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மன்ற தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
மன்ற செயலாளர் சிதம்பரநேரு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவைகுண்டம் ஆற்றுப் பாலம் சில வருடங்களில் நூற்றாண்டை தொட உள்ளது பல வெள்ளத்தை தாங்கி கம்பீரமாக இருக்கிற பாலத்தில் மரசெடி வளர்ந்து ஆபத்தை உண்டாக்குவதைதடுக்க பொதுப்பணித்துறைக்கு மனு அனுப்புவது,மழை வெள்ள நேரத்தில் மக்களை பாதுகாத்து முதலமைச்சரிடம் விருது பெற்ற வட்டாட்சியரை பாராட்டுவது. சட்டசபையிலே நமது திருவைகுண்டத்தில் பல வருடங்களாக ஓடாத அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலின் தேரை பழுது பார்த்து ஓட அரசு நடவடிக்கை எடுக்குமாறு குரல் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களை பாராட்டுவது, திருவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளியை நல்ல வளர்ச்சி பாதைக்கு வழி நடத்துகிற தலைமை ஆசிரியை ராணி அவர்களை பாராட்டுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் டிப்டாப்மாசானம், முத்துக்குமார்,ராஜாராம்,சங்கர் பந்தல் முருகன், காளி கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் மோகன் நன்றி கூறினார்.


