அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கடத்தலை தடுத்து வருகிறார்கள்.இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை தினங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடத்தல் நடைபெறக்கூடாது என்பதற்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணிகளை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஏடிஜிபி அன்பு உத்தரவின் பேரில் எஸ்.பி.சினேகபிரியா,டி.எஸ்.பி. சுரேஷ்குமார் ஆகியோரது ஆலோசனையின் பேரில் வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரத்தில் தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை தூத்துக்குடி மாவட்ட பிரிவு எஸ்.ஐ பரத்லிங்கம் மற்றும் போலீசார் பூலையா, நாகராஜன், காந்த சுப்ரமணியன் ஆகியோர் வசவப்பபுரம் செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார்கள், பைக்குகள் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடத்தல் நடைபெறுகிறதா என சோதனையிட்டனர். சோதனையின் போது முறப்பநாடு காவல் உதவி காவல் ஆய்வாளர் அந்தோணி உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.


