தூத்துக்குடியில் பத்திரம், பட்டா இல்லாத 200 பேருக்கு குடிநீர் இணைப்பு ஆணையை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பத்திரம் மற்றும் பட்டா இல்லாத மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் வழங்க சில நிபந்தனைங்களுடன் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சொத்து வரி நிர்ணயம் செய்து குடிநீர் இணைப்பு ஆணையினை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், பகுதி கழக செயலாளர்களும் மாமன்ற உறுப்பினர்களுமான சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, பொன்னப்பன், சந்திரபோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


