தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் தெய்வச்செயல்புரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு தெய்வச்செயல்புரம் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் பாரதப்பிரதமர் நீண்ட ஆயுளோடு இருக்கவும் மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டிய பிரார்த்தனை இன்று நடந்தது.
அதனைத் தொடர்ந்து தெய்வச்செயல்புரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் நங்கமுத்து முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் கிஷோர்குமார் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் முருகன், சீனிவாசன் வசந்த், செல்வம், சுரேஷ், ஒன்றிய பொதுச் செயலாளர் மணிகண்டன் ஒன்றிய செயலாளர்கள் செல்வி, சித்திரைகுமார், மாரியப்பன் ஒன்றிய துணை தலைவர் சரவணன் பொருளாளர் பால்துரை மற்றும் ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் தம்பான், பிரவின், சுனில், கோபால், மூர்த்தி, செந்தூர்பாண்டியன், கணேசன், முருகையா, பரமசிவன், முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


