கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வேலை நிறுத்தம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
கொல்கத்தாவில் கடந்த ஒன்பதாம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்யலவை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்தும் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் பெண் மருத்துவர் களுக்கு தனியாக பணிஅறை ஒதுக்க வேண்டும் மேலும் கொல்கத்தா சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது சிபிஐ உரிய விசாரணை நடத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் இந்திய மருத்துவ சங்கம் முதுகலை பட்டதாரி மருத்துவ சங்கம் மற்றும் பயிற்சி மருத்துவர் சங்கம் சார்பில் மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பிய மருத்துவர்கள் பேரணியாக சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் முதுகலை பட்டதாரி மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின் இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.


