சௌந்தர்யா இவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். பொன்னுமணி என்ற திரைப்படத்தின் மூலம் செளந்தர்யா அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் செளந்தர்யா நடித்துள்ளார். ரஜினிகாந்த்துடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உலங்கு வானூர்தியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்தார். மேலும் அப்போது அவர் கர்ப்பவதியாக இறந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சவுந்தர்யா ஜூலை 18 1972 கோலார் மாவட்டத்தில் தற்போதைய காலத்தின் கர்நாடகத்தில் பிறந்தார். பெற்றோர்கள் கே.எஸ் சத்யநாராயண மற்றும் மஞ்சுளா ஆவர். அவரது தந்தை கன்னட திரைப்பட எழுத்தாளர்-தயாரிப்பாளர். பெங்களூரில் தனது முதல் வருடம் கழித்து தனது MBBS ஐ நிறுத்தினார்.
2003 ஆம் ஆண்டில், ஜி.எஸ். ரகுவை மணந்தார், அவரது தாய்வழி உறவினர், தொழில் ரீதியாக மென்பொருள் பொறியாளர் ஆவார்.


