ஸ்ரீவைகுண்டம் சார்பு நீதிமன்றத்தினை மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் சுந்தர் மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திருமதி பவானி சுப்பராயன் மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் ஜெகதீஸ் சந்திரா மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் இளங்கோவன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீவைகுண்டம் சார்பு நீதிமன்றத்தினை மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் சுந்தர் மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திருமதி.ஏ.பவானி சுப்பராயன் மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் ஜெகதீஸ் சந்திரா மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் இளங்கோவன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.
மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் சுந்தர் அவர்கள் தெரிவித்ததாவது:
ஸ்ரீவைகுண்டத்தில் புதிய நீதிமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நீதிமன்றம் 165 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஸ்ரீவைகுண்டம் சுற்றி நவதிருப்பதி ஸ்தலங்கள் உள்ளன. பல்வேறு கோவில்கள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது பாராட்டுக்குரியது. வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கு சிறந்த குடிமகனாக அறியப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள். வழக்கறிஞர்கள் சிறந்த குடிமகனாக இருந்து தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளையும் கடமைகளையும் சிறப்பாக செய்து எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டாக இருந்தால் தான் நீதிமன்றங்களுக்கும் நீதித்துறைக்கும் மக்கள் நம்பிக்கை மட்டுமன்றி மிகப்பெரிய வளர்ச்சிக்கு அது பயனளிக்கும்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளில் 90 சதவிகிதம் பேர் வழக்கறிஞராக இருந்தவர்கள். நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றால் அது வழக்கறிஞர்களால் மட்டும்தான் முடியும். வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் மாண்பை கட்டிக்காக்க வேண்டும். எங்கெல்லாம் பெண் தொழில் முனைவோர்கள் உருவாகிறார்களோ அங்குதான் சமுதாய முன்னேற்றம் ஏற்படும் என மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திரு.ளு.ளு.சுந்தர் அவர்கள் தெரிவித்தார்கள்.
மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திருமதி.ஏ.பவானி சுப்பராயன் அவர்கள் தெரிவித்ததாவது:
பெருமைமிகு முத்துநகரம் வணிகத்திற்கும்ää வாழ்க்கைக்கும் பல பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. நீங்கள் நீதிமன்றம் என்பது வெறும் கட்டிடம் என்று நினைப்பீர்கள். அதுவல்ல. அது 150 ஆண்டு கால பழங்கால காவியம். நீங்கள் வழக்கறிஞராகப் பணி செய்து மக்களுக்கு உதவி செய்கிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உங்களது பணி சிறக்க மூத்தோர்கள் வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இளம் வழக்கறிஞர்களுக்கு ஒரு அறிவுரை. மேலே அமர்ந்திருப்பது ஒரு நீதிபதியோ அல்லது நீதியரசரோ அல்ல. அந்த நாற்காலிக்கு கொடுக்கக்கூடிய மரியாதை. மனிதர்கள் வருவார்கள்ää பல நீதிபதிகள் வருவார்கள். ஆனால் நீதிமன்றம் என்றும் உண்டு. அதை மனதில் கொள்வீர். உங்களுடைய உழைப்பே வாழ்க்கையில் வெற்றிக்கு அடித்தளம். அதை மனதில் கொள்வீர். இன்று நாம் திறந்து வைத்த சார்பு நீதிமன்றம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 33வது நீதிமன்றம். ஆணுக்கு பெண் என்றும் சமம். பெண் வழக்கறிஞர்கள் கூட்டம் ஆண்களுக்கு சமமாக உள்ளனர். அதைக்கண்டு நான் இன்று பெருமை கொள்கிறேன். உங்களது வழக்குகளை செம்மையான வாதங்களால் வென்றிட வேண்டும். தமிழ் மண் உள்ளவரை பெண்கள் நீங்கள் ஜெயித்திடுவீர். இளம் வழக்கறிஞர்கள் சீரிய மக்களாய் இந்த மண்ணில் வழக்கு உரைத்திடுவீர். தமிழ் மண் உள்ளவரை இந்த நீதிமன்றம் நீண்ட நெடுங்காலம் பறைசாற்றும் உங்கள் புகழை. வாழ்க தமிழ் என மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திருமதி.ஏ.பவானி சுப்பராயன் அவர்கள் தெரிவித்தார்.
மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் ஜெகதீஸ் சந்திரா அவர்கள் தெரிவித்ததாவது:
இந்த சார்பு நீதிமன்ற திறப்பு விழாவிற்கு பொதுமக்களாகிய நீங்கள் பெருந்திரளாக வருகைதந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் எங்கள்மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையில்தான் இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளீர்கள். இந்த நீதிமன்றத்தைப் பொறுத்தவரையிலே 163 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட நீதிமன்றம். இதன் ஆளுகை வரைமுறை விருதுநகர் மாவட்டத்தின் எல்லை வரை இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட நீங்கள் நிறைய விட்டுக்கொடுத்திருக்கிறீர்கள். விட்டுக்கொடு;த்தவர்கள் கெட்டுப்போவதில்லை. ஸ்ரீவைகுண்டத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு ஆன்மீக பூமி என்று சொல்வார்கள். இங்கு பெரிய கோயில் இருக்கிறது. முகமது நபி அவர்களின் வழிதோன்றல் என்று சொல்லப்படுகின்ற ஜிந்தா மதார் நினைவிடமும் இருக்கின்றது. 400 ஆண்டுகள் பழமையான குருஸ் கோவில் ஒன்று இருக்கிறது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழ்கின்ற ஒரு இடமாக இந்த ஸ்ரீவைகுண்டம் இருந்தாலும் மண்ணின் மைந்தன் என்ற முறையில் என் வேண்டுகோளையும் சில நேரங்களில் வெளிப்படுத்தியாக வேண்டும். வழக்கறிஞர்களாகிய நமக்கு சட்டப்பணிகள் மட்டுமல்லாது சமுதாயப்பணியும் தேவை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நமக்கு எதுக்கு கருப்பு கோட் கொடுத்திருக்கிறார்கள் என்றால் கருப்பு கலரில் எந்த கலரை கலந்தாலும் அதன் கலர் மாறாது. நாம் எந்த ஒரு இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் ஆனால் கோர்ட் என்று வரும்போது பொதுவாக ஒரு வழக்கறிஞராகதான் வர வேண்டுமே தவிரää நான் அந்த இடத்தில் இருந்து வந்தவன் என்று பின்புலத்தை பேசாமல்ää நாம் சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் பார்க்க வேண்டும். ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதுதான் தமிழர்களின் பெருமை. அதை வழக்கறிஞர்களாகிய நீங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை. ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடமும் சீக்கிரம் வந்துவிடும். வழக்கறிஞர்களுக்கு சமுதாயப்பணி தேவை. ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் பணியாற்றிய திரு.செல்லப்பாண்டியன்ää திரு.சி.பா.ஆதித்தனார்ää திரு.பி.எச்.பாண்டியன் ஆகியோர் சபாநாயகர்களாகியுள்ளார்கள். வழக்கறிஞர்கள் அத்தியாவசியமான நேரங்களில் வாய்தா வாங்குவது தவறில்லை. ஆனால் மக்கள் காத்திருக்கமாட்டார்கள். நமக்கு தினமும் வந்து செல்கின்ற இடம். ஆனால் அவர்களுக்கு தினமும் வந்து செல்லும் இடம் கிடையாது. ஒரு வழக்கு வந்துவிட்டால் அதை சீக்கிரமாக முடித்துக்கொடுக்கின்ற கடமை வழக்கறிஞர்களுக்கு இருக்கிறது. அதை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திரு.யு.னு.ஜெகதீஸ் சந்திரா அவர்கள் தெரிவித்தார்கள்.
மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திரு. பு.இளங்கோவன் அவர்கள் தெரிவித்ததாவது:
எப்போது ஒரு நீதி நீதியாக இருக்கும் என்றால் அது மனித உணர்வோடு சேர்த்து செய்யப்படும்போதுதான். அந்த உணர்வு எப்போது அற்றுப்போகிறதோ அது நீதியாக இருக்க முடியாது. இந்த நீதிமன்றமானது பல தடைகளைத் தாண்டி வந்திருக்கின்றது. இந்த மண்ணின் மைந்தர்களின் முனைப்பில்தான் நீதிமன்றம் அமைக்கப்பட்டு இன்று இந்த விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நீதிமன்றத்தில் உள்ள 1000 வழக்குகளை எவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டுமோ அந்த முன்னெடுப்புகளை வழக்கறிஞர்கள் எடுக்க வேண்டும். பழமை எப்படி புதுமையாகிறதோ அதுபோன்ற இந்த நீதிமன்றம் ஒரு நல்ல நீதிமன்றமாக உருவாக வேண்டும். அதற்கு பொதுமக்களும்ää வழக்கறிஞர்களும் புதிதாக வந்திருக்கின்ற நீதிபதிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி நீதிமன்றத்தை ஒரு முன்மாதிரி நீதிமன்றமாக உயர்த்த வேண்டும் என மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திரு.பு.இளங்கோவன் அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திரு.ஆ.செல்வம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன்ää தலைமை குற்றவியல் நடுவர் திரு.சு.செல்வக்குமார் ஸ்ரீவைகுண்டம் சார்பு நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ( 1 ரூ 2) நீதிபதி திரு.பி.மகாராஜன் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திருமதி.எஸ்.முத்துலட்சுமி ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆறுமுகப்பெருமாள் சார்பு நீதிமன்றங்களின் நீதிபதிகள்ää வழக்கறிஞர்கள் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


