
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி எம்.பி கோவில்பட்டியில் நாளை மாலை (செவ்வாய்கிழமை) பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.
இதுகுறித்து திமுக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெப்பாசிட் இழக்கச் செய்து வெற்றி பெற்றார்.
இதனையடுத்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள கனிமொழி எம்பி தன்னை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த தூத்துக்குடி தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வை கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நாளை நான்கு மணிக்கு குலசேகரபுரத்தில் தொடங்கி லிங்கம்பட்டி வடக்கு திட்டங்குளம் தெற்கு திட்டங்குளம் விஜயபுாி காிசல்குளம் பாண்டவர் மங்கலம் பசுவந்தனை ரோடு ஜோதிநகர் கடலையூர்ரோடு தாமஸ் நகர் இலுப்பையூரணி புதுக்கிராமம் வேலாயுதபுரம் காமராஜர் சிலை பஸ்டாணட், இனாம் மணியாச்சி ஆலம்பட்டி படர்ந்த புலி, முடுக்குமீண்டான்பட்டி நாலாட்டின்புதூரில் நிறைவு செய்கிறார்.
மேற்கண்ட இடங்களில் நடைபெறும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகள் கனிமொழி எம்.பிக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்திடவும், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும் கேட்டுக் கொள்கிறேன். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுவாக எழுதிக் கொடுத்திடவும் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.