
காலாராணிக்கு மனதுக்கு வருத்தமாக இருந்தது.
“தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு நகரத்தில் இத்தனை சுதந்திர போராட்ட வீரர்கள் இருந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களை பற்றி பெரிய அளவில் வெளியே தெரியவில்லை. நாம் மட்டும் இந்த ஆய்வை மேற்கொள்ளாமல் இருந்தால் இதுவும் தெரியாமல் போய் விடும் அல்லவா?”
“ஆஷ் துரை கொலை வழக்கை ஆவணப்படுத்திய மாதிரி குலசேகரபட்டினம் லோன் துரை கொலை வழக்கை பெரிய அளவில் கொண்ட வில்லையே ஏன்? “ அவள் மனதுக்குள் பல கேள்வி. ஆனால் கேள்விக்கெல்லாம் விடையளிக்க ஒவ்வொரு நபரும் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆறுமுகநேரியில் இரட்டையர் என அழைக்கப்பட்ட செல்வராஜ் அய்யாவும் கோசல்ராம் அய்யாவும் சுதந்திரம் கிடைத்த பின்பு இந்த மக்களுக்கு செய்த காரியங்கள் அபூர்வமானது. ஆகவே இவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே செல்வராஜ் அய்யா வீட்டுக்கு சென்றுஅவர்களின் குடும்பத்தாருடன் பேசி விட்டோம்.கே.டி.கே என அழைக்கப்படும் கோசல்ராம் அய்யாவை பற்றி கேட்க வேண்டும். யாரிடம் கேட்கலாம்?”
அதற்கும் விடைகிடைத்தது. முத்துகிருஷ்ணன் அதற்காக அடையாளம் கட்டப்பட்ட நபர்தான் முனைவர் த-.த.தவசிமுத்து அய்யா.
“முனைவர் த.த.தவசிமுத்து அய்யா அவர்கள் தூத்துக்குடி மாவட்ட சுதந்திரபோராட்ட வாரிசுகளை ஒன்றிணைக்கும் பணியைச் செய்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தியாகிகள் குறித்து வரலாறு சேகரிக்க சென்றால் அவர் நமக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருகிறார். அதோடு மட்டுமல்லாமல் திருச்செந்தூர் தாலூகா சுதந்திரபோராட்ட வீரர்கள் குறித்து ஆவணப்படுத்தியுள்ளார். எனவே அவரை சென்று பார்ப்போம்”. நூலகர் முத்துகிருஷ்ணன் அவர்கள் பேச்சு காலாராணி கட்டுப்பட்டு அய்யாவை காண கிளம்பினார்கள்.
இருவரும் ஆறுமுகநேரியில் உள்ள த.த.தவசிமுத்து அய்யா வீட்டுக்கு சென்றார்கள். அங்கே இன்முகத்துடன் அவர்களை வரவேற்றார் தவசிமுத்து அய்யா. அவரிடம் பேசும் முன்பு அவர் யார் என்று அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?. அந்த தகவலை நூலகர்தானே சொல்லவேண்டும்.
இருவரையும் வீட்டு வரண்டாவில் அமர வைத்து விட்டு உள்ளே சென்றார் அய்யா. “கொஞ்சம் நேரம் இருங்க. உங்க கூட கிளம்பி வாறேன்”
அய்யர் வருவதற்குள் அவரைபற்றி பட்டியலிட ஆரம்பித்தார் நூலகர்.
“தியாகி த.தங்கவேல் நாடார் த.சண்முகக்கனி தம்பதியருக்கு மகனாய் ஆறுமுகநேரியில் பிறந்தவர் இவர்.வரலாறு என்பது புதிய கண்டெடுப்புகள் மூலம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. புதிய கண்டெடுப்புகள், அயராத முயற்சியால் வெளிப்படுகின்றன. அவ்வகையில், குடநாடு என்று முற்காலத்தில் போற்றப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பழமையான கற்காலம், சங்ககாலம் முதலான வாழ்வியற் தடயங்கள், கட்டடக்கலை, கல்வெட்டுக்கள், சிற்பங்கள், நாட்டுப்புறவியல் என பல்வேறு ஆய்வுகளைச் செய்து அதனைத் தமிழகத் தொல்லியல் கழகம் மூலமாகவும், நாளிதழ்கள் மூலமும் ஆவணப்படுத்தி பதிவு செய்பவர் தான் ஆறுமுகனேரி முனைவர் த.த.தவசிமுத்து”.
கலாராணி நிமிர்ந்தாள். “ஆகா. எவ்வளவு பெரிய ஆளுமை இவர்” என ஆச்சரியப்பட்டார். அவரின் வரவேற்பு அறையில் பல்வேறு புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதையெல்லாம் பார்த்தவள்,மீண்டும் நூலகரை பார்த்தாள். எனவே நூலகர் அவரை பற்றி பேசத் தொடங்கினார்.
“இவர் ஓவியர், ஏராளமான ஓவியக்கண்காட்சிகளை நடத்தியுள்ளார், இவரது ஓவியத் திறனுக்கு ÕÕகலைச்சுடர்மணிÕÕ பட்டத்தைத் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை 2000&இல் வழங்கியுள்ளது. 1997&இல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையில் கல்வெட்டுப் பயிற்சி பெற்றார். கிராமப்புற மக்களின் பண்பாடு மற்றும் வழிபாட்டில் இடம்பெற்றுள்ள நிகழ்த்துக் கலையான வில்லிசை கதைப்பாடலில் மறைந்துள்ள வரலாற்று உண்மைகளை கண்டறிந்து மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்”.
கலாராணியின் கண்கள் விரிந்தது. அவரை பற்றியே தனியாக ஒரு ஆய்வு செய்யலாம் போல. அந்த அளவுக்கு தகவல்கள் இருந்தது.
“பானை ஓடுகளில் வரலாறு பற்றி ஆய்வு செய்துள்ளார். ஆறுமுகனேரியின் வடக்கே கொட்ட மடைக்காடு, சிலாபக்காடு போன்ற காடுகளில் கேட்பாரற்றுக் கிடந்த பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், சுடுமண் உறைகள், அளவிற் பெரிய செங்கற்கள், அறுக்கப்பட்ட சங்குகளில் காணப்பட்ட கீறல்கள், ஊது உலைகளின் துகள்கள், இவற்றிடையே பாண்டியரின் மீன் முத்திரைக் கல் இவரால் கண்டு பிடிக்கப்பட்டன. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககால கொற்கைத் துறைமுகத்தில் அயல்நாட்டாரும் வந்து போன வியாபார மையமிது என்ற கூற்றை இவர் ஆய்வு மூலம் நிருபித்து உள்ளார். அவ்விடத்தில் மண் அடுக்குகளில் இராஜராஜ சோழன் காலத்திய கோயில் விமானத்தின் சுடுமண் ஓடுகளைச் சேகரித்து வரலாற்றைப் பதிவு செய்தார்”.
“அப்படியென்றால் இவர் தொல்லியல் ஆய்வாளரும் கூட. சங்ககாலபாடல்களை உண்மையென்று நிருபணம் செய்வது தொல்லியல் தானே. அய்யா தொல்லியலிலும் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கிறார்களே”. கலாராணி மனதுக்குள் பேசுவதற்குள் நூலகர் இவரைப் பற்றி அடுக்கி பேச ஆரம்பித்து விட்டார்.
“பிரமிடு வடிவ குவாட்ஸ் அணிகலன் சாயர்புரம் தேரியில் இடைக்கற்கால மனிதன் அணிந்த குவாட்ஸ் கல்லிலான பிரமிடு வடிவ அணிகலன் தமிழன் பெருமைக்குச் சான்று. இதுவும் இவரது கண்டெடுப்பாகும். ஆறுமுகனேரியில் உள்ள குருநாத சுவாமி கோயிலில் கி.பி.1660 விஜயநகரக் காலத்தைச்சேர்ந்த கல்வெட்டினைக் கண்டெடுத்து, அதில் ஆறுமுகனேரி ‘அசுபநாடுÕ என்ற நிர்வாகப்பிரிவில் இருந்தது என்ற குதிரை வணிகத்தோடு தொடர்புடைய புதிய செய்தியைத் வெளி உலகிற்கு கொண்டு வந்தார்”.
நூலகர் முத்துக்கிருஷ்ணன் அருகில் இருந்த தண்ணீர் பானையில் தண்ணீர் எடுத்து குடித்தார். அதன் பின் சிறிது நேரம் அமர்ந்திருந்தவர், மீண்டும் பேச ஆரம்பித்தார்.
“2006 இல் விளாத்திக்குளம் புதூர் அருகில் உள்ள சிவலார்பட்டியில் கிடைத்த பலகைக்கல்லின் மூலம் கி.பி.1012 இராஜராஜசோழன் மெய்க்கீர்த்தியுடன் மாறந்தாய ஈஸ்வரம் கோயிலுக்கு (அங்கு இக்கோயில் தற்போது இல்லை) விளக்கெரிக்க சீவலணன் என்பார் சாவாமூவாப் பேராடு (ஆடுகள் கொடுக்கப்படும் அவை வளர்ந்து குட்டிபோட்டு பல,பல தலைமுறையாகத் தொடரும் அவற்றின் பால் வழிபாட்டிற்கு பயன் படுத்தப்படும்.) நிலங்களும் கொடுத்ததை கூறி அவ்வூர் மக்களை ஆச்சரியப்பட வைத்தார்”.
“ஆகா எவ்வளவு ஆய்வுகளை செய்துள்ளார் அய்யா”. தகவல் இத்தோடு முடியவில்லை தொடர்ந்தது.
“2005-இல் காயல்பட்டினம் நயினாத்தெருவில் கி.பி.1433 நோனப்பா காழியாரின் மகள் வீவியாரின் மீசான் கல்வெட்டை கண்டெடுத்துள்ளார். அங்கு காசு சேகரிப்பாளர்கள் கொடுத்த பழங்காசுகளை ஆய்வு செய்து, அவைகள் 13&ஆம் நூற்றாண்டின் குலசேகரன் காசு, சேரனின் வில்சின்னம் பொறித்த காசு, விஜயநகர காலத்திய காசு என்பதை விளக்கி சொன்னார்”.
“2011-இல் திருச்செந்தூர் கோயிலில் கண்டுபிடிப்பதற்குக் கல்வெட்டு ஒன்றுமில்லை என்ற நிலையில் வள்ளி ஒளிந்த குகையில் எண்ணெய் பூசி வழிபடப்பட்டு வந்த பலகைக்கல்லில் எழுத்துக்கள் இருப்பதறிந்து அதனைச் சுத்தம்செய்து அது கி.பி 1656&ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று கண்டறிந்தார். கி.பி.1648&இல் டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோயிலைச் சேதம் செய்து சென்ற பின்பு முத்தையர் என்பவர் திருப்பணி செய்த தகவல் அந்த பலகை எழுத்தில் உள்ளது என்பதை உறுதி செய்தார்”.
திருச்செந்தூர் தான் எவ்வளவு பெரிய சுரங்கம். சமீபத்தில் கூட கடலுக்குள் இருந்து ஏகப்பட்ட கல்வெட்டுகள் வெளியே வந்து கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நியூஸ் சேனலில் பார்த்துக்கொண்டிருக்கிறாள் கலாராணி. ஆனால் அய்யா அப்போதே வள்ளிக்குகையில் கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளார்.
“2012-இல் காயல்பட்டினம், ரத்னாபுரியில் உள்ள அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் பல கல்வெட்டுகளைக் கண்டறிந்ததுடன், கோயிலின் முன்புறம் வடகிழக்குப் பகுதி சுவர் கல்வெட்டு கி.பி.16 ஆம் நூற்றாண்டில் துறைமுகமாயிருந்த காயல்பட்டினம் ÕÕஉதையமார்த் தாண்டன் பட்டினம்ÕÕ என்றழைக்கப்பட்டது என்ற புதிய தகவலைக் கண்டு பிடித்து கூறினார்”.
மூச்சு விட்டுக்கொண்டார் நூலகர்.
“2014-இல் சாத்தான்குளம் புதுக்குளம் கிராமத்தில் பாசனக்கலிங்கு கல்வெட்டுக்கள் மூன்றினைக் கண்டெடுத்தார். அக்காலத்தில் நீர்நிலைகள் மீது மக்கள் கொண்டிருந்த அக்கறையைக் கட்டுரையாகத் தந்தார். வீரபாண்டியன் பட்டினத்தில் 2016&இல் கல்லறைக் கல்வெட்டினைக் கண்டறிந்தார். சாத்தான் குளம் கொம்பன் குளத்தில் ஸ்ரீ கோதா சமேதா ராஜகோபால சுவாமி கோயிலின் சிற்ப நயத்தையும் கூறி அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு செய்தியையும் பகிர்ந்தார். 2015&இல் சாத்தான்குளம் பன்னம்பாறையின் வடக்குப் பகுதியில் பல்லாங்குழி ஓடையருகே சங்ககாலத் தமிழன் விளையாடிய பல்லாங்குழி மற்றும் அதனருகே பெருவழிப்பாதைக் குழிகளையும் கண்டறிந்து, இப்பகுதி தமிழர்களின் பண்பட்ட நாகரீகத்தின் அடையாளம் என்று உலகிற்கு வெளிப்படுத்தினார். பன்னம்பாறை சிதம்பர விநாயகர் கோயிலுக்குரிய நிலம் குறித்த கல்வெட்டுடன் கூடிய சூலக்கல்லில் விநாயகருடைய எலியின் வடிவமும் அங்குசமும் புடைச்சிற்பமாக உள்ளதை ஆய்வு செய்து சொன்னார். திருநெல்வேலி அருகே சேதுராயன்புதூரில் நெல்லையப்பர் கோயிலுக்குரிய மயில்,வேலுடன் கூடிய சூலக்கல் கண்டெடுத்ததார்”.
“ஆகா. எவ்வளவு பெரிய ஆய்வாளர்”. கலாராணி ஆச்சரியப்பட்டார்.
“இவர் சிறந்த எழுத்தாளரும் கூட, நிறைய எழுதியிருக்கிறார். அதைப்பற்றியும் சொல்லுகிறேன் கேள்” என்றார் நூலகர்
“ஆதிச்சநல்லூர், கொற்கை, கழுகுமலை சிறப்புகளை ஆய்வுக் கட்டுரையாகயும் , 2012 இல் தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா மலரில் Õதூத்துக்குடி மாவட்டக் கிராமங்களும் பெயர்களும்ÕÕ என்ற சுவையான கட்டுரையும் வழங்கியுள்ளார்.
நாள் 26.-10.-2013 மதுரை உலகத்தமிழ்ச்சங்கம் தமிழ்நாடு அரசு நிறுவனம் ஓலைச்சுவடிகள் கருத்தரங்கம் 26.10.2013&ல் நடந்தது. இதில்– சத்திரிய குலப்பெருமாள் கதைப்பாடல் என்னும் ஆய்வுரையை சமர்பித்தார்.
29-30.-01-.2014 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திருச்சி தமிழாய்வுத்துறை, தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரி நடத்திய பண்டையத் தமிழரின் வாழ்வியலில் நுண்கலைகள் தேசியக்கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு சிறப்பு செய்துள்ளார்.
ஆழ்வார்தோப்பு அருள்மிகு ஏகாந்தலிங்க சுவாமி கோயில், ஆழ்வார்திருநகரி அருள்மிகு கைலாசநாதசாமி கோயில், ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கைலாசநாத சுவாமி கோயில், காயல்பட்டினம் அருள்மிகு மெய்கண்டீஸ்வர சுவாமி கோயில், காயல்பட்டினம் அழகியமணவாளப் பெருமாள் சுவாமி கோயில், குலசேகரன்பட்டிணம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயில், நங்கைமொழி காளகஸ்தீஸ்வர சுவாமி கோயில், கொம்பன்குளம் கோதா சமேதா ராஜகோபாலசுவாமி கோயில் குட்டம் ஆனந்தவல்லி அம்மன் திருக்கோயில், வரலாற்றுடன், கட்டக்கலை, சிற்ப நயங்கள் குறித்து கட்டுரை எழுதியுள்ளார்.
தாம் சேகரித்து வந்த ஓலைச்சுவடிகளை நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கியுள்ளார்.
ஆறுமுகனேரியின் தொன்மைச்சிறப்புகள், சுதந்திரப் போராட்டக் காலச் செய்திகளுடன் 2008 இல் ÕÕதியாக பூமி ஆறுமுகனேரிÕÕ என்ற நூல் வெளியிட்டுள்ளார். 2018-இல் “இந்திய விடுதலைப்போரில் தூத்துக்குடி மாவட்டம்ÕÕ என்ற நூலை வெளியிட்டுள்ளார். பழனியில் நடந்த மாநாட்டில் கூட கலந்து கொண்டு திருமுருகன் குறித்து கட்டுரை எழுதினார். அது அறநிலையத்துறை மூலம் வெளியிடப்பட்ட மலரில் வெளிவந்துள்ளது. இவர் பழனிக்கு சென்று கட்டுரை வாசித்து விட்டு வந்துள்ளார்”.
ஒரு தியாகின் மகனின் வாழ்க்கையில் தான் எத்தனை சாதனை. நூலகர் கூற கூற கலாராணிக்கு சந்தோசமாக இருந்தது.
“அரசு மேல் நிலைப்பள்ளி வாழவல்லான், ஆறுமுகனேரி ஓவிய ஆசிரியராகவும், தமிழாசிரியராக திருச்செந்தூர், சாத்தான்குளம் புதுக்குளம், சாத்தான்குளம் பன்னம்பாறையில் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது தந்தை தியாகி த.தங்கவேல் நாடார், பெருந்தலைவர் காமராசர், தியாகசீலர் கக்கனுடன். இரண்டரைஆண்டுகள் சிறைவாசம் இருந்தவர்”.
நூலகர் இறுதியாக இந்த தகவலை சொன்னார்.
“இவர் தஞ்சாவூர், தமிழகத் தொல்லியல் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர், மாநிலத் தணிக்கையாளர், ஓவியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டசெயலாளர், தென் தமிழகத்தின் தொல்லியல் வரலாற்றில் காணப்படாத புதிய செய்திகளை தேடிக் கொண்டிருப்பதும்; கண்டெடுப்பதும் தமிழன்னைக்குச் செய்யும் சேவை என்கிறார். முகநூல் மூலம் பல்வேறு தொல்லியல் வரலாற்றுப் பதிவுகளைச் செய்துவருகின்றார்.
இவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆவணப்படுத்துவதில் முன்னணியில் உள்ளார்”. என்று நூலகர் முத்துக்கிருஷ்ணன் கூறிமுடிக்கவும் , அய்யாவும் கிளம்பி வந்து விட்டார்.
“அய்யா. எங்களுக்கு சில உதவி வேண்டும். கலாராணி சுதந்திரபோராட்ட தியாகிகள் குறித்து ஆய்வு செய்கிறாள். அவளுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்” என்றார்.
“அதற்காகத்தானே நான் வெளியே கிளம்ப தயாராக வந்துள்ளேன்”. என்றார்.
ஆகா அய்யா எங்களை பார்த்தவுடன் புரிந்து கொண்டார். எங்களின் தேவை களப்பணித்தான் என்று அறிந்து கொண்டார். ஆகவே கிளம்பி வந்து விட்டார். உண்மைத்தான் அவர் இதுவரை எத்தனை ஆராய்ச்சியாளரை பார்த்து இருப்பார்.
“அடுத்து நாம் எங்கே செல்லவேண்டும்” என்றார்.
“கே.டி.கே அய்யா நினைவிடத்துக்கு செல்ல வேண்டும்” என்றனர்.
“சரி” அவர் முன்னே கிளம்ப, இருவரும் பின்னால் நடைபோட்டனர்.
நடந்து போகும் தூரம் தான். கிட்டத்தட்ட ஆறுமுகனேரி மெயின் பஜாரில்தான் கே.டி.கே அய்யா நினைவிடம் இருக்கிறது.
கே.டி.கே அவர்கள் சுதந்திரபோராட்ட தியாகி மட்டுமல்ல. அவர் சுதந்திரம் அடைந்த பிறகும் மக்களுக்காக அதிகமான பணிகளை செய்துள்ளார்.
நினைவிடத்துக்கு சென்றார்கள். நினைவிடத்திலேயே அவரது சிலையும் இருந்தது. மூவரும் சிலை முன்பு நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அதன் பின் நினைவிடம் உள்ளே சென்றார்கள். அங்கே கே.டி.கே அய்யா மகான் இருக்கும் இடத்தினை கண்டனர். அவரைப்பற்றி தகவலை யாரிடம் கேட்கலாம் என நினைத்த போது, தவசிமுத்து அய்யா கே.டி.கே அவர்களை பற்றி பேச ஆரம்பித்தார்.
கலிங்கர் கே. து£சிமுத்து நாடார் & பூவம்மாள் இவர்களுக்குத் தலைமகனாக 1915&ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22&ம் தேதி ஆறுமுகநேரியில் பிறந்தார் கே.டி.கோசல்ராம். ஆறுமுகநேரி, ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் 5வது வரையிலும் சென்னை செயின்ட் பால்ஸ் உயர் நிலைப்பள்ளி யில் 10வது வரையும் படித்தார்.
1930 முதலே முழுநேர அரசியலில் ஈடுபட்டார். சிறு வயதிலேயே தேசியப்பற்று ஏற்பட்டு வெள்ளை ஏகாதி பத்தியத்திற்கு விரோதமான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார், பலமுறை கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு. இளம் வயது காரணமாக ஒவ்வொரு முறையும் ஒரு வாரம் வரை சப்ஜெயிலில் அடைத்து வைத்து விட்டு, அதன் பின் அடித்து விரட்டிவிடுவார்கள். உப்பு தொழிலாளர் சங்கத் தலைவரானார்.
1942 போராட்டத்தின்போது கலைக்டர் ஹெஜ்மாடியால் இந்திய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உப்பு சத்தியாகிரக வழக்கில் ஒரு ஆண்டு தண்டிக்கப்பட்டார். பின் குரும்பூர் சதி வழக்கில் 1 வது எதிரியாகவும். போலீஸ் அதிகாரிகளிடம் துப்பாக்கிகளைப் பிடுங்கியதாகவும், தூண்டிய தாகவும். ஸ்பெஷல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 21 மாதங்கள் சப்ஜெயிலில் கொடுமைப்படுத்தப்பட்டார். சாக்கு சட்டையை அணியச் செய்தும், இரவும் பகலும் கை விலங்கு போட்டு, தனி அறையில் அடைத்து, துன்புறுத்தினார்கள்.
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, கொக்கிரகுளம் சப்ஜெயில்களில் தண்டனை பெற்றார். சரியான சாட்சியமில்லை என்று 21 மாதங்களுக்குப் பிறகு குரும்பூர் வழக்கை வாபஸ் பெற்றார்கள். பின் பாதுகாப்புக் கைதியாக தஞ்சை, வேலூர் சிறைகளில் இருந்தார். 1945 டிசம்பரில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆலயப் பிரவேச சட்டம் வருமுன்னரே. கி. கனகசபாபதி பிள்ளையுடன் தலைமை தாங்கி, திருச்செந்தூர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச்சென்றார். ஒரு சில முதலாளிகளிடம் இருந்த உப்புத் தொழிற்சாலையை 1949ம் வருடம் தான் தலைவராக இருந்த உப்பு தொழிலாளர் சங்கத்திற்கு, மத்திய சர்க்காரிலிருந்து குத்தகையை மாற்றி தொழில் சங்கத்திற்கு சொந்தமாக்கி, கூட்டுறவின் மூலம் தொழிலாளர்களை டைரக்டர்களாகவும் எம்.எஸ். செல்வராஜை தலைவராக்கியும் 1949லேயே சோஷியலிசத்தை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டினார்.
நாடுகடத்தப்பட்ட இலங்கை இந்தியர்களுக்கென நாசரேத்தில் நூற்புஆலை அமைத்து புதிய சட்ட திட்டங்களுடன் தொழிலாளர்களுக்கு மில்லை சொந்தமாக் கினார். இவருடன் எம்.எஸ் செல்வராஜன் அதிக பங்கு பெற்றார்.
தியாகிகளுக்கு பென்ஷன் கொடுக்க வேண்டுமென 1966 டிசம்பர் மாதம் சட்ட சபை காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போதைய முதல்வர் திரு. வி. பக்தவத்சலம் அதை ஏற்றுக் கொண்டார்.
1970 செப்டம்பர் மாதம் அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தியாகிகளுக்கு மத்திய சர்க்கார் பென்ஷன் கொடுக்க வேண்டுமென தீர்மானம் கொண்டு வந்து பிரதமர் ஸ்ரீமதி இந்திராகாந்தியை சம்மதிக்க செய்தார்.
1946 முதல் 1967 வரை சட்டசபை, மேல் சபை உறுப்பினராக இருந்தார் ஜமீன்தாரி ஒழிப்பு மசோதா, ஹிந்து மத பரிபாலன மசோதா, நிலச்சீர்திருத்த மசோதாக்களின் கமிட்டி அங்கத்தினராக இருந்து பல சட்டங்கள் கொண்டுவர காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
1930&இல் சிறுவனாக இருந்தபோது வெள்ளையராட்சிக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதால் சிறையிலடைக்கப்பட்டார். 1942&இல் கீரனு£ர் உப்புச்சத்தியாகிரகம், குரும்பூர் இரயில்வே நிலையம் சதி வழக்கு, துப்பாக்கியை கைப்பற்றிய வழக்கு, மெஞ்ஞானபுரம் தபால் ஆபீஸ் சதி வழக்கு, குலசேகரப்பட்டினம் சதி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளால் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் சாக்குச்சட்டை அணிவிக்கப்பட்டும், கைவிலங்கு போடப்பட்டும், துன்புறுத்தப்பட்டார். திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, கொக்கிரகுளம் சப்ஜெயில்களிலும் வேலு£ர், தஞ்சாவூர் கேம்ப் ஜெயிலிலும் சிறையில் அடைக்கப்பட்டார். 1945 இல் விடுதலை அடைந்தார். அதன் பின் திருநெல்வேலி ஜில்லா காங்கிரஸ் கமிட்டிதலைவராக பணியாற்றியுள்ளார்”.
என்று சொல்லி முடித்தார் முனைவர் தவசி முத்து அய்யா. அங்கே கே.டி.கே அய்யா வகித்த பதவி குறித்து பலகை வைக்கப்பட்டிருந்தது. அதை குறிப்பு எடுத்துக்கொண்டாள் கலாராணி.
1946&தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர்.
1952, 1962&இருமுறை சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினர்.
1957 தெற்கு தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர்.
1977, 1980, 1984, மூன்று முறை திருச்செந்து£ர் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். புதுவை&மாத இதழ், தினச்செய்தி இதழ்களில் செய்தி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
கே.டி.கேயின் மிகப்பெரிய சாதனை மணிமுத்தாறு அணைக்கட்டு. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கட்டிய அணைக்கட்டு. மக்களின் நிதி உதவியால் கட்டப்பட்ட அணைக்கட்டு இது. இதைப்பற்றி தவசிமுத்து அய்யாவிடம் கேட்டார்கள். அவர் பதிலளித்தார்.
“மணிமுத்தாறு அணைக்கட்டைக் கட்டிய தென்னாட்டுச் சிங்கம் எனபோற்றப்பட்டவர். நெல்லை ஜில்லாவில் 4 தாலுகாக்கள் பயனடையும் மணிமுத்தாறு திட்டத்துக்கு பொதுமக்களிடம் ஒருகோடியே இருபத்தைந்து லட்ச ரூபாய் அந்தக் காலத்திலேயே வசூலித்துக் கொடுத்து மணிமுத்தாறு திட்டத்தினைக் கொண்டு வந்தார்.முழுக்க மண் கரையால் கட்டப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் தற்போது வரை தாமிரபரணியில் தண்ணீர் வற்றாமல் இருக்க அன்றே திட்டம் தீட்டியுள்ளார். வறட்சி பகுதியான நான்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளத்திற்கும் விவசாயத்துக்கு மணிமுத்தாற்றில் இருந்து தண்ணீர் கொடுக்க கால்வாய் வெட்ட திட்டம் தீட்டினார். பழந்தொழி எனும் சாகுபடியே தற்போது உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்ட்டு விவசாயிகளுக்கு கொடுக்க அரசு ஆவணங்களை ஏற்படுத்தியதும் இவரே”.
கே.டி.கே என்ற அந்த மந்திரச்சொல் தமிழகத்தில் எத்தனை பணிகள் ஆற்றியுள்ளது. பிற்காலத்தில்அவர் செய்து வைத்த திட்டத்தினால் எத்தனை நன்மைகள் பிறந்துள்ளது. முனைவர் தவசி முத்து அய்யா தொடர்ந்தார்.
“1948ல் புன்னக்காயலில் இருந்து ஆலந்தலை வரை குடிதண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்ட 13 கிராமங்களுக்கு குடி நீர்த் திட்டத்தை கொண்டுவந்தார். ஜில்லா முழுவதும் கிராமம் கிராமமாக அவர் நுழைந்து அரசியல் பணி ஆற்றாத இடங்களே இல்லை எனக் கூறலாம். கடும் உழைப்பும், விடா முயற்சியும், நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே’ என்று சொல்லும் துணிவும் மிக்க போராட்டக்காரர் கே.டி.கே அவர்கள். அவர், தமிழக அரசியலில் தனக்கென ஒரு இடத்தை தேடி வைத்துக்கொண்டவர்
சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற பாராளுமன்றதில் வலியுறுத்தியவர். குலக்கல்வித் திட்டம் தமிழ்நாட்டில் ஒழிய குரல் கொடுத்தவர். தாழ்த்தப்பட்ட மக்களைத் திருச்செந்து£ர் கோவிலுக்குள் தடையை மீறி அழைத்துச்சென்ற முற்போக்குச் சிந்தனையார். பச்சையாறு திட்டம், விஜயநாராயணம் ராணுவம் ஏவுகணைத் திட்டம். பணங்குடி ராக்கெட் தளம், சென்னை கன்னியாகுமரி கடலோர சாலைத்திட்டம். திண்டுக்கல் அகல ரயில் பாதைத்திட்டம், காயல்பட்டினம் கூட்டுக் குடிநீர் திட்டம், நாசரேத் நு£ற்பாலை கூட்டுறவு உப்புத்தொழிலாளர் சங்கம். “டிசிடபுள் யூ” தொழிச்சாலை, காயல்பட்டினம் ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏராளமான தொடக்கப்பள்ளிகள் மருத்துவமனைகள், சாலைவசதிகள், குடிநீர் வசதிகள் அமைத்துத்தந்தவர். மக்கள் உள்ளங்களில் இன்றும் என்றும் வாழ்பவர் கே.டி.கோசல்ராம்.
என்று சொல்லி முடித்தார் தவசி முத்து அய்யா.
அவர்பேசும் போதே பெருமையாக இருந்தது. ஒரு மனிதன் சுதந்திர போராட்ட தியாகி என்பது பெருமை அல்ல. அதற்கு பிறகு சுதந்திர இந்தியாவில் எத்தனை நன்மைகள் செய்திருக்கிறார். அதுவும் திருச்செந்தூர் நாடாளுமன்றம் என்பது மிகப்பெரியது. இங்கே கடற்கரையில் இருந்து மேற்குதொடர்ச்சி மலை வரை விரிந்து கிடந்த தொகுதி. இப்பகுதிக்குள் இவர் அடிக்கடி சென்று மக்களை சந்தித்து இருக்கிறார் என்றால் எவ்வளவு பெருமை.
“அய்யா நீங்கள் நிறைய வரலாறு கே.டி.கே அய்யாவை பற்றி கூறி விட்டீர்கள். இப்போது நாங்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் இருக்கும் இடத்தினை காணவேண்டும் என நினைக்கிறோம்”, என்றாள் கலாராணி.
“சுதந்திர போராட்ட வீரர்களுக்கென நினைவு சின்னம் திருச்செந்தூரில் உள்ளது. ஆறுமுக னேரியில் சுதந்திரபோராட்ட தியாகிகள் வீட்டில் அவர்களது நினைவாக விளம்பர பலகை வைத்துள்ளார்கள். ஆறுமுகநேரி பஞ்சாயத்து அலுவலகத்தில் தியாகிகள் பெயர் பட்டியல் உள்ளது. வியாபாரிகள் சங்க கட்டிடத்திலும் தியாகிகள் படம் வைக்கப்பட்டுள்ளது”. என்று அய்யா சொன்னவுடன் இவர்களுக்கு ஆர்வம் பெரிதானது.
“அய்யா அந்த இடங்களுக்கெல்லாம் எங்களை அழைத்து செல்வீர்களா?” கலாராணி ஆர்வம் முனைவருக்கு சந்தோசத்தினை அளித்தது.
“வருங்கால இளைஞர்கள் தியாகிகள் குறித்து தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களை பற்றி அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் நாங்கள் எல்லாம் நினைக்கிறோம். தற்போது நீ கல்லூரி மாணவியாக இங்கே வந்து தியாகிகள் குறித்து ஆய்வு செய்வது எனக்கு சந்தோசத்தினை தருகிறது. ஆகவே நான் உன்னை அங்கே அழைத்துச்செல்கிறேன்” என்றார்.
“சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு, தாலுகாவின் தலைநகரில் நினைவுச் சின்னம் ஏற்படுத்தும் பணியை இந்தியாவிலேயே முதல் முதலாக திருச்செந்தூர் தாலூகாவில் மேற்கொண்டனர். இந்த பெருமையை திருச்செந்தூர் தாலூகா மக்கள் பெற காரணமானவர்கள் புகழ்பெற்ற மறக்கமுடியாத இரட்டையர்கள் கே.டி.கோசல்ராம், எம்.எஸ்.செல்வராஜ் ஆகியோர் ஆவர்”. என்றார்.
“அய்யா அந்த இடத்துக்கு எங்களை கூட்டிச்செல்வீர்களா?”, என கேட்டார் கலாராணி.
சந்தோசமாக தவசிமுத்து அய்யா அவர்களை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் நோக்கி கிளம்பினார்.
திருச்செந்தூர் பேரூராட்சிக்கு முன்புதான் அந்த ஸ்தூபி இருந்தது. அந்த இடத்தில் , ஸ்தூபியை சுற்றி அதிகமான கல்வெட்டுகள் இருந்தது. அந்த கல்வெட்டு முன்னால் முன்று பேரும் போய் நின்றார்கள். இந்த ஸ்தூபியின் திறப்பு விழா குறித்து பேச ஆரம்பித்தார் தவசி முத்து அய்யா.
“6.05.1973 அன்று இந்த ஸ்தூபி திறக்கப்பட்டது. திருச்செந்தூர் தாலுகா சுதந்திர போராட்ட வீரர்களின் ஞாபகார்த்த ஸ்தூபி திருச்செந்தூர் பேரூராட்சி மன்றத்தின் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் ஞாபகார்த்த பூங்காவில் அமைக்க மன்றத்தினர் அனுமதித்தனர். அப்போது தியாகி சுதந்திரா கே.சுப்பையர் தலைவராக இருந்தார். உப தலைவராக ராஜரத்தினம் அவர்களும், நிர்வாக அதிகாரியாக மந்திரம் அவர்களும் பணியாற்றினர்.
திறப்பு விழாவிற்காக, பாரத பாதுகாப்பு அமைச்சர் ஜெகசீவன்ராம், கோசல்ராமுடன் ஹெலிகாப்டரில் வந்து ஆறுமுகநேரி தாரங்கதரா கெமிக்கல்ஸ் மைதானத்தில் இறங்கினார். அவரை ஊர்வலமாக தியாகிகள் வரவேற்று வந்தனர். திருச்செந்தூர் தாலூகா தியாகிகள் சங்கத் தலைவரான என் தந்தை தியாகி த.தங்கவேல் நாடார் அவரை வரவேற்று மாலை அணிவித்தார். திருச்செந்தூர் பஞ்சாயத்துத் தலைவர் சுதந்திரா தியாகி சுப்பைய்யரும் நிர்வாக அதிகாரி மந்திரமும் அமைச்சரை வரவேற்றனர். இந்த ஸ்தூபி மிகச்சிறப்பாக விளங்கியது. இதில் சுதந்திர போராட்டத் தியாகி பி.எஸ்.நாராயணன் நினைவு கொடியேற்று விழா 24.01.2011&ல் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற அமைப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் இந்த நினைவுக் கம்பத்தில் தியாகி படத்தினைத் திறந்து வைத்து, கொடியேற்றி வைத்தார்.
பி.எஸ்.நாராயணன் திருச்செந்தூர் கீழ புதுத்தெருவை சேர்ந்த உல.பரமசிவன் பிள்ளை மகன். 1942 குலசை லோன் துரை கொலை வழக்கில் ஆறாவது எதிரியாகச் சேர்க்கப்பட்டு ஐந்து வருட கடுங்கால் தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை காலம் பூராவையும் அலிப்புரம் முகாம் சிறையில் அனுபவித்து 1946 மார்ச்சு மாதம் விடுதலை யானார். 1950 ல் தியாகி பெஞ்சமின் சகோதரி புஷ்பம் அம்மாளைக் கலப்பு திருமணம் செய்து கொண்டவர். மத்திய மாநில பென்சனைப் பெற்றவர். இவருடைய வாரிசுகள் தற்போதும் திருச்செந்தூர் குலசேகரபட்டினம் பகுதியில் வசிக்கிறார்கள்.
ஸ்தூபி அமைக்கும் போது திருச்செந்தூர் பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்த சுதந்திரர் சுப்பையர் கணபதி ஐயர் மகன். திருச்செந்தூர் ஆகஸ்டு போராட்டம், தந்தி கம்பி அறுத்தல், ஒரு வருட கடுங்கால், 36 கசையடி, மருத்வாலாவில் ஒரு வருட கடுங்காவல் அலிப்புரம் சிறையில் இரண்டு தடவை அடைக்கப்பட்டார். இவர் மனைவி பெயர் காவேரியம்மாள், 1932 முதல் தேச சேவையில் ஈடுபட்டுள்ளார்”.
இந்த இடத்தில் அய்யா யாரை பற்றி பேசினாலும் அவர்கள் பின்னால் ஒரு வரலாற்றை வைத்து பேசினார். ஒவ்வொரு போராட்ட காரர்களுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது.
திருச்செந்தூர் தாலூகாவில் சுதந்திர போராட்ட வீரர்கள் சங்கம் ஏற்படுத்தியிருந்தனர். தலைவராக ஆறுமுகநேரி தங்கவேல் நாடார், செயலாளராக நாசரேத் மகாராஜன், உபதலைவராக திருச்செந்தூர் சுதந்திரர் சுப்பையர், உதவி செயலாளராக ஆழ்வார்திருநகரி ராமன் ஆகியோர் இருந்துள்ளனர்.
திருச்செந்தூர் வந்த ஜெகஜீவன் ராமன் தேசிய வாசிப்பு அறை ஒன்றைத் திறந்து வைத்துள்ளார். இதை ஏ.கே.எஸ் சங்கரம்மாள் மற்றும் ஏ.கே.எஸ் கந்தசாமி ஆகியோர் இலவசமாக வழங்கியுள்ளார்கள். இந்த அறை 6.05.1973&ல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலையெல்லாம் அய்யா சொல்லுவதை கேட்டுக்கொண்டே அந்த நினைவிடத்தினை சுற்றி பார்த்தனர் நூலகரும், கலாராணியும்.
திருச்செந்தூர் பேரூராட்சியில் காந்தி சிலை, எதிரே காமராஜர் சிலை, அருகில் சுதந்திர பேராட்ட வீரருக்கான ஆர்ச், அம்பேத்கார் பூங்காவில் எங்கு பார்த்தாலும் தியாகிகளின் கல்வெட்டு என பார்ப்போரை பிரமிக்க செய்வதாக இருந்தது.
“இந்தியாவிலேயே முதல் முதலில் திறக்கப்பட்ட இந்த சுதந்திரபோராட்ட தியாகி ஸ்தூபி தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் உள்ளது என்பது நமக்கு மிகவும் பெருமையாக உள்ளது”. என்றார் தவசிமுத்து அய்யா.
அப்போதுதான் ஒரு தகவலை அவர் சொன்னார். தியாகிகள் லோன் துரையை கொலை செய்ய திட்டமிட்டபோது, ஒரு தியாகிக்கு குண்டடி பட்டது என்றார்.
அந்த தியாகி யார்? எப்படி குண்டடி பட்டது.
(குலசேகரபட்டினம் லோன் துரை கொலை வழக்கு தொடரும்)