தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர தொழிற்சாலையில், 55-வது தேசிய பாதுகாப்பு வார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன், தேசிய பாதுகாப்பு வார விழாவினை கொடியேற்றித் தொடங்கி வைத்தார். அவரது தலைமையில் ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ‘பாதுகாப்பு உறுதிமொழி’ எடுத்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்பிக் நகர் SMAC IAC அரங்கில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு சாதனங்கள் குறித்த பொருட்காட்சியையும் கூடுதல் இயக்குநர் திறந்து வைத்துப் பார்வையிட்டார். தேசிய பாதுகாப்பு வார விழாவின் நிறைவு விழாவில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பாதுகாப்பு வார விழாவையொட்டி தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.


