தாமிரபரணி கரையில் தான் எத்தனை எத்தனை கோயில்கள். புராண கதைகளுக்கு செவி சாய்க்கும் அற்புத கோயில் ஒன்று திருநெல்வேலி மாநகரில் உள்ளது. அதை பற்றித் தான் தற்போது பார்க்கப்போகிறோம்.
ஆம்.அந்த கோயில் கருவூர் சித்தருக்கு பொறுமையை போதித்த நெல்லை தொண்டர்கள் நயினார்
முற்காலத்தில் சைவ, சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞான சம்பந்தர் பெருமான் சிவதலங் களுக்கு யாத்திரை சென்றார். அவர் குற்றாலம் சென்று குற்றாலநாதரை வணங்கி பதிகங்கள் பாடி மகிழ்ந்தார். பின்னர் தன் தொண்டர்களுடன் நெல்லைக்கு வந்தார். நெல்லையில் அரசாட்சி செய்து வரும் நெல்லையப் பரை வணங்கி பதிகம் பாடினார். அப்போது அவருடன் வந்த அடியார்கள், இவ்விடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என விரும்பினார்கள்.
தங்களின் விருப்பத்தை திருஞானசம்பந்தரிடம் தெரிவித்தனர். சம்பந்தருக்கும் அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனாலும் சிவலிங்கத்தை தனியே பிரதிஷ்டை செய்ய அவர் மனம் இடம் தரவில்லை. ஆகையால் அகத்தியரை மானசீகமாக நினைத்து அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றும்படி வேண்டினார். அப்போது அவர் வில்வ வனமாக இருக்கும் இப்பகுதியில் சுவாமி சுயம்புலிங்கமாக இருக்கும் இடத்தை காட்டினார். சம்பந்தரும் இங்கு வந்து சுயம்புலிங்கத்தை கண்டு வணங்கினார். பின்னர் சம்பந்தர் அடியார்களுடன் சேர்ந்து லிங்கத்திற்கு பூஜைகள் செய்து வழிபட்டார். சிவன் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளினார். தொண்டர்களுக்காக எழுந்தருளியவர் என்பதால் சிவன் ‘தொண்டர்கள் நயினார்’ என்ற பெயரும் பெற்று விளங்கி வருகிறார்.
சிவபக்தரான கருவூர் சித்தர் நெல்லையப்பரை தரிசிக்க வந்தார். அப்போது அவர் கோயில் வாசல் முன் நின்று கொண்டு நெல்லை யப்பா, நெல்லையப்பா என தனக்கு காட்சி கொடுக்கும்படி அழைத்தார். தான் அழைத்தவுடன் தன் முன் சிவபெருமான் தோன்றி காட்சி யளிக்கும் வரத்தை பெற்றிருந்த கருவூர் சித்தருக்கு ஏனோ சிவன் காட்சி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட கருவூர் சித்தர் “ஈசன் இங்கில்லை எருக்கு உண் டாகுக” என சாபமிட்டு வடக்கு நோக்கி திரும்பிச் சென்றார். அப்போது சிறிது தூரம் சென்ற பிறகு சித்தர் முன் ஜோதி வடிவில் சிவபெருமான் தோன்றி காட்சி அருளினார். அவர் சிவனை வணங்கிய போது ஜோதியானது தொண்டர்கள் நயினார் தலத்தை நோக்கி வந்தது. கருவூராரும் பின்தொடர்ந்து வந்து பார்த்தபோது ஜோதி இத்தலத்தில் உள்ள லிங்கத்தில் ஐக்கியமானது.
பின்னர் மானூரில் சிவபெருமான் கருவூரர் இருக்கு காட்சி தந்து பொறுமை அனைவருக்கும் அவசியம் பொறுமை இல்லாத வர்களால் எதையும் சாதிக்க முடியாது என்று உபதேசித்து விட்டு எம்பெருமான் மறைந்தார். கரூர் சித்தரும் இதனை உணர்ந்து நெல்லைக்கு வந்து நெல்லையப்பர் கோயிலில் ஈசன் இங்கு இருக்கிறார் எருக்கு அற்றுக என்று சொல்லிவிட்டு தனது தல யாத்திரையை தொடர்ந்தார். இதனை நினைவு கூறும் வகையில் கரூர் சித்தருக்கு காட்சி கொடுத்த வைபவம் ஆவணி மூலத்தில் நடக்கிறது இக்கோயிலில் கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத் திருமேனியாக காட்சி தருகிறார் தொண்டர்கள் நயினார். இதுபோல் கோமதி அம்பாள் கிழக்கு நோக்கிய தனி கருவறையில் சற்றே இடைநிலைத்து ஒரு கரத்தில் மலர் தங்கியும் மற்றொரு கரத்தை கீழே தொங்கவிட்டும் நின்ற கோலத்தில் செவ்விதழ்கள் உடன் சிரிப்புடன் பிரம்மாண்ட திருமேனியாக காட்சி தருகிறாள்.
நெல்லையப்பர் கோயிலுக்கு வடமேற்கு பகுதியில் கிழக்கு திசை நோக்கி கோமதி அம்பாள் சமேத தொண்டர்கள் நைனார் கோவில் அமைந்துள்ளது கோயில் முகப்பில் சிறிய மூன்று நிலை கோபுரம் அமைந்துள்ளது இந்த கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது அதனை தாண்டி முன் மண்டபத்தில் காட்சி தரும் விநாயகரை வணங்கி உள்ளே சென்றால் கருவறையில் லிங்கு திருமேனியாக தொண்டர்கள் நயினார் காட்சி தருகிறார். சுவாமி சன்னதிக்கு உள்பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக நால்வர், சப்த மாதர், சுரதேவர், அறுபத்துமூவவர், தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், மகாலட்சுமி, லிங்க நாதர், சுப்ரமணியர்,துர்க்கை, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், நடராஜர், சிவகாமி அம்மை ஆகியோர் காட்சி தருகின்றனர் வெளிப்புற முன் மண்டபத்தில் நவகிரக சந்நிதியும் பைரவர் சன்னதியும் இருக்க வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னதியும் தல விருச்சம் ஆகிய வில்வ மரமும் உள்ளன. கோயிலில் திருஞானசம்பந்தர், அகத்தியர், கருவூர் சித்தர் ஆகியோர்களுக்கும் தனி சன்னதி உள்ளது.
இக்கோயிலில் சிவனை திருஞானசம்பந்தர் வழிபட்டிருந்தாலும் என்ன காரணத்தாலோ அவர் பதிகம் பாடவில்லை. அம்பாள் கோமதி சன்னிதியில் சுவாமிக்கு இடது பக்கத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறாள் இவர்களுக்கு முன்புறம் மகா மண்டபத்தில் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் இவளது சன்னதியில் அபிராமி அந்தாதி பாடி வழிபடுவது சிறப்பு. ஆடித்தபசு விழாவின்போது அம்பாளுக்கு மாவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருமண தடை உள்ள பெண்கள் அம்பாளுக்கு தாலி பொட்டு புடவை சாத்தி வேண்டி கொள்கிறார்கள் அம்பாள் சந்நிதி பிரகாரத்தில் அரசமரத்தின் கீழே வினை தீர்க்கும் விநாயகர் ஆவுடையார் மீது அமர்ந்து இருக்கிறார் இவருக்கு பின்புறத்தில் மற்றொரு விநாயகர் மேற்கு நோக்கி அருளுகிறார் ஒரே இடத்தில் முன்னும் பின்னும் திரும்பிய விநாயகர்களை பக்தர்கள் இங்கு தரிசிப்பது சிறப்பாகும். இத்தலத்து இறைவனை தொண்டர்கள் நயினார் ஆதிமூலநாதர் வில்வவன நாதர், திருமேற்றளி உடைய நைனார் ஆகிய திரு நாமங்களில் அழைக்கப்படுகின்றார்.
(நதி வற்றாமல் ஓடும்)


