தூத்துக்குடியில் 50ஆண்டுகாலமாக இருந்த பஸ் டாப் இடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் மீது முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் குற்றம்சாட்டியு்ளளார்.
தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு வட்டக்கோவில் அருகே கடந்த 50 ஆண்டுகளாக இருந்த எம்ஜிஆர் பயணிகள் நிழற்குடையை மாநகராட்சி அதிரிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதாக முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த 1965ல் எம்ஜிஆர் மன்றம் என்று ஆரம்பிக்கப்பட்டு எம்ஜிஆர் பஸ் ஸ்டாப் ஆக மாற்றப்பட்டது. இதன் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் பத்திரம் போட முயற்சித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தேன்.
இந்த நிலையில் இங்கிருந்த பேருந்து நிறுத்தத்தையும், அருகில் இருந்த காமராஜர் சிலையையும் மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. இந்த பகுதி திமுக கவுன்சிலர் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை இடித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதிமுக சார்பில போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
கவுன்சிலர் விளக்கம்
இதுகுறித்து கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்க்ஸ்லினிடம் கேட்டபோது, வட்டக் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் சாலை விரிவாக்கத்திற்காக பஸ் ஸ்டாப் இடிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் காழ்புணர்ச்சி எதுவும் இல்லை. மேயர் ஆய்வு செய்ததின் அடிப்படையில் பேருந்து நிழற்குடை அகற்றப்பட்டுள்ளது. இதுபோல் மாநகர் முழுவதும் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.


