தூத்துக்குடி டி மார்ட் வணிக வளாகத்தில் உள்ள டீசல் பம்ப் அறையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள டி மார்ட் வணிக வளாகத்தில் டீசல் பம்ப் அறையில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி மாவட்ட அலுவலர் ம.மனோ பிரசன்னா, உதவி மாவட்ட அலுவலர் இ.இராஜு மற்றும் தூத்துக்குடி நிலைய உதவி மாவட்ட அலுவலர் ந.நட்டார் ஆனந்தி ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் விரைந்து சென்று, 2 இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


