1945-1950 ஆம் ஆண்டுகளில் திருநெல்வேலியில் மிகப்புகழ்பெற்ற வளர்ந்து வருகிற வழக்கறிஞர்களாக #பாளை_சண்முகம் #என்_டி #வானமாமலை ஆகிய இருவரும் காணப்பட்டனர்
1949 ஆம் ஆண்டு *திருநெல்வேலி சதி வழக்கு* பொதுவுடமை இயக்கத்தை சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் வழக்கில் வாதாடுவதற்கு கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டிருந்ததால் வழக்கறிஞர்கள் பயந்தனர் இந்நிலையில் அந்த வழக்கினை எதிர்த்து பாளை சண்முகம் என் டி வானமாமலை வாதாடினர். இவர்களை இரட்டையர்கள் என்றும் 2 வக்கீல்களுக்கு ஒரு குமாஸ்தா வைத்துக்கொண்டு வாதாடுகிற வழக்கறிஞர்களாக காணப்பட்டனர்
*பாளைசண்முகம்*
ஒருங்கிணைந்த திருநெல்வேலிமாவட்டம்ஸ்ரீவைகுண்டம் தாலுகா அணியாபரநல்லூர் என்ற சிற்றூரில் சண்முககோனார் அவர்கள் குமாரர் ச நல்லபெருமாள் அவர்கள் தலைமை அஞ்சலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். அவருக்கு ஐந்து புதல்வர்கள் மூத்த புதல்வர் திரு பாளை சண்முகம் இவர் வழக்கறிஞர்
பாளையங்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் அதன்பின்பு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞராக பதிவு செய்தார் சென்னையில் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது சென்னை மாநகர மாணவர் இயக்கத்தின் செயலாளராக பணிபுரிந்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார்
சட்டக் கல்லூரியில் பயின்று முடிந்தவுடன் செங்கோட்டை கரையாளர் வீட்டில் அவரது அண்ணன் மகளை திருமணம் முடித்தார்.அவரது மைத்துனர் மைனர் கரையாளர்
முதலாவதாக அவர் சட்டம் பயின்று கொண்டிருக்கும் பொழுது காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர் எப்பொழுதும் கதர் வேஷ்டி வெள்ளை ஜிப்பா அணிந்து தான் கல்லூரிக்கு செல்வார்
ஒரு நா ள்சென்னையிலிருந்து ரயிலில் பயணம் செய்கிற பொழுது பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் ஜீவா உடன் பயணம் செய்தார் அவருடைய பேச்சாற்றலால் தன்னை பொதுவுடமை இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார் .
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுவுடமை இயக்கம் வளர்ச்சி பெற பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்து செயல்பட்டார்
இவர் வழக்கறிஞராக திரு எம் டி வானமாமலை உடன் இணைந்து புகழ் பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்தார்.
இவர் *கல்வியாளர் வழக்கறிஞர் சுதந்திர போராட்ட தியாகி* என பன்முக திறமை கொண்ட மனிதராக பாளை சண்முகம் திகழ்ந்தார்
*காசுக்காக வாதாடாமல் ஏழைகளின் வறுமையின் பால் கருணைகொண்டு அவர்களுக்காக எந்தவித பணம் வாங்காமல் இலவசமாக வாதாடிய வழக்கறிஞர்* இவர்.
பொதுவுடைமை இயக்கத் தலைவர் *திரு நல்லகண்ணு* அவர்கள் முதன்முதலாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்க்கிற பொழுது அவரது தந்தையார் இதை மறுதலித்தார் ஆனால் இவர் அணியாபரணநல்லூர் சண்முக கோனார் பெயரன் வழக்கறிஞர் சண்முகம் இந்த இயக்கத்தில் இருக்கிறார் ஆகவே நானும் இது போன்று இயக்கத்தில் சேர்ந்துவிட வேண்டுமென்று அவர் சொன்னதால் நல்லகன்னு தந்தையார் மறுக்காமல் இயக்கத்தில் சேர வைத்து இன்றளவும் அவர் கூட இது மிகவும் பெருமையாக பேசி வருகிறார்
1949ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது நெல்லை சதி வழக்கில் ஆர். நல்லக்கண்ணு, ப. மாணிக்கம், மாயாண்டி பாரதி, ஏ. நல்லசிவன், பொண்ணு, கிருஷ்ண கோனார், ஆர் வி அனந்தகிருஷ்ணன் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது மொத்தம் 97 பேர் கைதானார்கள்
இதில் கைதாகாத பாலதண்டாயுதம், மீனாட்சிநாதன், பயில்வான் அருணாச்சலம் ஆகிய மூவர் மீது தனியாக 1953ல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பாலதண்டாயுதம் மற்றும் மீனாட்சிநாதனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இதில் வாதாடினார்.
1972 நவம்பர் 20ம் தேதி அன்று சவேரியார் கல்லுாரியின் பேராசிரியர் சீனிவாசன் என்பவரைப் போலீசார் வீடு புகுந்து தாக்கி, அவரது இரண்டு சகோதரர்களையும் அடித்து உதைத்து, மூவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தெரு வழியாக இழுத்துச் சென்றனர்.
கோரிக்கை மனுவுடன் கலெக்டர் அலுவலகம் நோக்கி மாணவர்கள் பெரும் ஊர்வலமாகச் சென்றனர்.
மனுவைக் கொடுக்க விடாமல் மாணவர்களைப் போலீசார் விரட்டியதில் லுார்து நாதன் என்ற கல்லூரி மாணவர் இறந்தார்.மாணவர் லுார்துநாதன் சேலத்தைச் சேர்ந்தவர். அவரது உடல் சேலம் சென்றது. சேலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தினர்
எந்தக் குற்றமும் செய்யாத பேராசிரியரை நடுத்தெருவில் அடித்து இழுத்துச் சென்றனர். போலீசார், சிறு பிள்ளைகள் சொன்னதை உண்மை என்று எடுத்தது முதல் தவறு. பின்னர் இதை ஆயுதப் போலீசார் தங்களின் கவுரவப் பிரச்சனையாகக் கருதி களத்தில் இறங்கினர் இது அடுத்த தவறு.’தினமலர்’ மட்டுமே முழு விவரங்களையும் மிக்க நடுநிலையில் பிரசுரித்தது.
ஆனால் இதைத் தமிழகம் முழுவதும் பெரும் பிரச்னையாக்கியது, ‘தினமலர்’தான்
இந்த விவரங்களைப் படங் களுடன் பெரிய அளவில் பேனர் செய்தியாகத் மறுநாளும் ‘தினமலர்’ வெளியிட்டது.
போலிஸ் ஐ ஜி அருள், உடனே விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டரை இரவு 3 மணிக்கே சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்
இந்த சம்பவத்தில் வக்கீலாக மட்டுமல்லாமல், சர்வகட்சிக் குழுவின் அமைப்பாளராகவும் செயல்பட்டவர் பாளை சண்முகம்
பாளை. சண்முகம் தயாரித்த திரைப்படங்கள் ‘காணி நிலம்’, ‘ஏழாவது மனிதன்’ ஆகியவையும் நினைவில் கொள்ளத்தக்கவை, ஏழாவது மனிதன் திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது.
*முக்கிய வழக்குகள்*
திராவிடர் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் மானமிகு கி வீரமணி அவர்கள் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலை எரித்து கைது செய்யப்பட்டார் . அவருக்கு பிணை தர நீதிமன்றம் மறுத்ததால் இவர் அவருக்கு சார்பாக ஆஜராகி பிணை வழங்க வாதாடினார் வெற்றி பெற்றார்
முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் அவர்கள் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் வருகிற பொழுது மணியாச்சி ரயில் நிலையத்தில் அவர் மீது கத்தி வீசப்பட்டது இதில் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எம்ஜிஆர் மீது கத்தி வீசப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி சாட்டப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்
அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.அவர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே முதல்வர் அவர்களால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டார்.உங்களுக்கு வாதாட பணம் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று எம்ஜிஆர் கேட்க அதற்கு குற்றவாளி வழக்கறிஞர் அவர்கள் கேட்டது வேர்க்கடலை பொட்டனம்தான் என்று சொன்னார் இதனால் வழக்கறிஞர் செயல் எம்ஜிஆரை ஆச்சரியப்பட வைத்தது. இது
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருமதி சந்திரலேகா மீது திராவகம் வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்லா என்பவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் 5 ஆண்டுகள் வாய்தா வாங்கபட்ட செய்தி பத்திரிக்கையில் வந்ததை வைத்து அவருக்காக நேராகச் சென்று விடுதலை வாங்கிக் கொடுத்தார்.
தாரங்கதாரா கெமிக்கல் கம்பெனி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக கம்பெனி நிர்வாகம் தொழிற்சங்க கிடையே கையெழுத்தான ஒப்பந்தம் நிர்வாகத்தின் துணைத் தலைவரை மிரட்டி ஒப்பந்தம் கையெழுத்தானதாக அதன் தலைவர் அவர்கள் வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கு தலைவருக்கும் மேஜிஸ்ட்ரேட்க்கும் நட்பு என்று கருதியதால் வழக்கறிஞர் வேண்டுகோள் படி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கில் தொழிலாளர்கள் சார்பாக வாதாடி வெற்றி பெற்றார்.
இண்டியா சிமெண்ட் கம்பெனிக்கு எதிராக சுற்றுச்சூழல் சார்ந்தது. பாளை சண்முகம் போராடியதன் குறிப்புகள் மாசுக்களை நிறைக்கும் சிமெண்ட் ஆலையை எதிர்க்கும் ஒருசம்பவத்தை சொல்லி திரைக்கதையாக்க சொல்ல பிறந்தது இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டம் அது. அதிலிருந்து உருவானதுதான்‘ஏழாவது மனிதன் திரைப்படம்
இவர் 1957 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்குகளில் 4800 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்
1957இல் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் அவர் வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவின் மிகச் சிறந்த நாடாளமன்ற வாதியாக இந்தியா முழுவதும் பிரபலமாகி இருப்பார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தமிழ்நாட்டில் மிகப் பெரிய தலைவராக விளங்கி இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
இவ்வாறு வாழ்க்கையில் பல போராட்ட எதிர்ப்புகளை தான்டி தன்னம்பிக்கை ரோடு வாழ்ந்து மறைந்த வழக்கறிஞர் பாளை சண்முகம் அவர்களது பிறந்த நாள் 2022 ஆண்டு அவரது நூற்றாண்டு விழா.அவரது துணிவு அனைவரதும் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும்
கட்டுரையாக்கம்
நல்லாசிரியர்
முனைவர் S A சங்கரன் யாதவ் பட்டதாரி ஆசிரியர் திருநெல்வேலி


