தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் பள்ளி மற்றும் வீனஸ் நிறுவனம் சார்பில் பொட்டல்காடு பொது நூலகத்திற்கு கணினி, பிரிண்டர் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் பெரும் மழை வெள்ளத்தினால் தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகியது. அதேபோன்று முள்ளக்காடு பஞ்சாயத்து பொட்டல்காடு கிராமத்தில் 48க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து பள்ளி மற்றும் பொது நூலகங்களின் பொருட்கள் மிகவும் சேதம் அடைந்தன. அந்த ஊர் பொதுமக்கள் தூத்துக்குடி வீனஸ் ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உதவியை நாடினர்.
உடனடியாக பாதிக்கப்பட்ட நூலகம் மிகவும் சேதம் அடைந்த நிலையில் அவற்றை நேரடியாக பார்வையிட்டு நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் கணினி மற்றும் பிரிண்டர், மேசை, நாற்காலி போன்ற பொருட்களை சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வீனஸ் ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனம் சார்பாக நிறுவனத்தின் சீனியர் மனிதவள மேலாளர் கே. மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து வழங்கினர்.
அப்போது பொது நூலக பொறுப்பாளர்கள் ஜேசுராஜா, பாலகுமார், ஆனந்தன், பூராஜா, அஜித்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பொருட்களை பெற்றுக் கொண்டனர். ஊர் பொதுமக்கள் சார்பாக சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயக்குனர் லக்ஷ்மி பிரீத்திக்கு நன்றி தெரிவித்தனர்.


