உலகினை அழித் திடும் யுத்தம் தவிர்த்திட உலக சகிப்புத் தின நாளான நவம்பர் 16 அன்று நேரு முகமூடி அணிந்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எல்லைநாயக்கன் பட்டி நாராயணன் நடுநிலைப்பள்ளி நடந்த இந்த விழாவிற்கு பள்ளி ஆஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி தலைமை வகித்தார். மாணவர்கள் சமாதானம் வேண்டி போரில் பாதித்த குழந்தைகளை நினைத்து ஜவகர்லால் நேருவின் பஞ்சசீலக் கொள்கையை கடைபிடிக்க உலகத் தலைவர்களை வேண்டினார்கள். அறிவியல் மனப்பான்மை பரப்பும் செயல்பாட்டில் பங்கேற்று சிறப்பித்தனர்.


