கயத்தாறு ஆர்.சி. பாத்திமா உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. மறைந்த பாரத பிரதமர் நேரு வின் முகமூடி அணிந்து உலகினை அழித்திடும் யுத்தமே வேண்டாம் என்றும் வேண்டும் சமாதானம் என யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இறந்த குழந்தைகளுக்காக யுத்தத்தை தவிர்க்க வேண்டியும் முழக்கமிட்டு வலம் வந்தனர். தலைமை ஆசிரியர் ஆக்னஸ் தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் வாலண்டைன் துரை, அஸ்ட்ரோ க்ளப் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


