
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளை முன்னிட்டு கயத்தாறில் மணிமண்டபத்தில் தமிழக அரசு, பல்வேறு கட்சிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன.
வீரபாண்டிய கட்டபொம்மன் 226 ஆவது நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு, பல்வேறு கட்சிகள் சார்பில் நேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் கயத்தாறு வட்டாட்சியர் அப்பணசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலர் துரை வைகோ எம்பி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். துணைப் பொதுச் செயலர் திமு ராஜேந்திரன், மாவட்டச் செயலர்கள் ஆர்.எஸ். ரமேஷ் (தூத்துக்குடி), கே எம் ஏ நிஜாம் (நெல்லை மாநகர்), மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ஜி ரமேஷ், முன்னாள் எம்பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதிமுக: அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி.சண்முகநாதன், சி.த. செல்லபாண்டியன் ஆகியோர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் எம்எல்ஏ மோகன், ஒன்றிய செயலர் செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
திமுக: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் குருராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.கே. (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்க தேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. பின்னர், கோட்டையில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு, வீரசக்கதேவி ஆலயகுழு சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து பொங்கலிட்டு வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து, அவரது சிலைக்கு வீர சக்கதேவி ஆலயக் குழுத் தலைவர் முருகபூபதி தலைமையில், செயலர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜன், துணைத் தலைவர் ஜெயக்குமார், ஆலயக்குழு நிர்வாகிகள் முருகன் அய்யனார் மற்றும் கிராம மக்கள் மாலை அணிவித்தனர்.
தேமுதிக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் சுரேஷ், விடுதலைக் கழகம் கட்சி நிறுவனர்- தலைவர் நாகராஜன், நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர்- தலைவர் மகாராஜா, பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலர் சுரேஷ், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளைத் தலைவர் ஜெயராமன், செயலர் கிருஷ்ணசாமி, பொருளாளர் செண்பகராஜ், தமிழக வெற்றிக்கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினர் உள்பட பலர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஜெகநாதன், ஜமால் உள்பட சுமார் 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.