திருச்செந்துாரில் வாலிபரை தாக்கிய திமுக இளைஞரணி நிர்வாகி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்த காமராஜ் என்பவர் மகன் சிவராஜன் (32), தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், நகராட்சி கழிவறைகளை ஒப்பந்தம் எடுத்து நடத்துகிறார். இவரிடம் வேலை பார்த்த, சின்னதம்பி (39) என்பவர், சில நாட்களாக பணிக்கு வரவில்லையாம்.
இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற சிவராஜன், சின்னதம்பியை அவதுாறாக பேசியதுடன் தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த சின்னதம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் திருச்செந்துார் காவல் நிலைய போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவராஜனை கைது செய்தனர்.


