15.08.2025 வெள்ளிக்கிழமை காலை 7.40 மணியளவில் ஏரல் விஸ்வகர்மா கலை வளாகத்தில் 79 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக மூவர்ண தேசியக்கொடி ஏற்றப்பட்டது காங்கிரஸ் பிரமுகர் அய்யம்பெருமாள் ஆச்சாரி அவர்கள் தலைமை வகித்தார் நகைமதிப்பீட்டாளர்
மகாராஜன் பா ஜ பிரமுகர்முத்துமாலை ஆகியோர் முன்னிலை வகித்தனர் வாய்ப்பாட்டுக் கலைஞர் கந்தன் ஆச்சாரி தேசிய பாடல்கள் பாடினார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஏரல் அரசு மருத்துவமனை கண் பரிசோதகர் யோகாசிற்பி ஆசைத்தம்பி அவர்கள் இறை வணக்கம் பாடிதேசியக்கொடி ஏற்றி , சிறப்புரையாற்றினார்கள். அன்னாருக்கு பயனாடை அணிவித்து கம்மாளரின் சாஸ்தா கோவில்கள் பற்றிய இனவரைவியல் ஆய்வு நூல் வழங்கப்பட்டது.
விழாவில் விஸ்வகுல தியாகிகள் விருதுநகர் முத்துசாமி ஆச்சாரி மதுரை மாயாண்டி பாரதி வல்லநாடு சுடலைமுத்து ஆச்சாரி ஆகியோர்கள் வீர தீரங்களைப் பற்றி பேசப்பட்டது. நிகழ்ச்சியில் நகைமதிப்பீட்டாளர் அருணன் பொற்கலைஞர் வள்ளிநாயகம் ஏரல் பா ஜ பொறுப்பாளர் கணேசன் பொற்கலைஞர்மணிகண்டன் பசிபோக்கும் தளத்தின் ஏரல் பொறுப்பாளர் ஐயப்பன் பொன் நகை லேசர் மாரியப்பன் பொற்கலைஞர் செல்வம் மாணவர்கள்
மணிகண்டன், நிவாஷினி, கனிஷ்கா, என பலரும் கலந்து கொண்டனர் அனைவரையும் ஒருங்கிணைத்த யோகா ஆர்வலர் தென்கரைமகாராஜன் இனிப்பு வழங்கினார். விழா ஏற்பாடு செய்த கவிஞர் ஏரல்ராஜன்நன்றி கூறினர் காலை வேலையில் மழைச் சாரலிலும்தேசிய உணர்வோடு பலரும் கலந்து கொண்டது மகிழ்ச்சியான தருணமாக அமைந்திருந்தது. 8.00 மணியளவில் விழா நிறைவடைந்தது . எட்டாம் ஆண்டாகத் தொடரும் விழாவாகும்.


