அரசர்குளத்தில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. இதற்காக அரசர்குளத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் தலைமை வகித்தார். துணை செயலாளர் ஜான்சன் முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் பால்துரை, மூர்த்தி, யாகோப்பு, பேச்சி முத்து, முனியாண்டி, செல்ல பாண்டி, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


