செய்துங்கநலலூர் ஆதி நாராயணர் அய்யா வைண்டரின் செல்வபதி ஆனி பெருந்தருவிழா நடந்தது. இதையட்டி அதிகாலை 5 மணிக்கு திரு நடைதிறப்பு, பணி விடை உகப்படிப்பு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தர்மம் நடைபெற்றது. 9 மணிக்கு ஸ்ரீகுரு சிவசந்திரன் தலைமயில் திருச்சம்பதியில் இருந்து பாற்கடல் பதம எடுத்து வந்து அய்யா ஸ்தலத்தினை அடைந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு அதை தொடர்நது ஏகமகா அன்னதர்மம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மக்கள்சந்தனகுடம் சுமந்து வர அய்யா கருட வாகனத்தில் மக்களுக்கு அருள் பாலித்தார். இரவு 9 மணிக்கு உண்பான் தர்மம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செல்வபதி பணிவிடையாளர் ராம்குமார் பரமசிவன், துணை பணிவிடையாளர பொன்கல்லாண்டன், கணேசன், வெங்கடாலசம், மாரியப்பன், முத்துக்குமார், முருகன் உள்பட ஊர் பணிவிடையாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


