மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட உதயமான 36 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு விதைக்கப்பட்ட பனைமர விதைகள் 100% முளைத்துள்ளது. மாவட்ட கலெக்டர் மரு.கி. செந்தில்ராஜ் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு பாராட்டு
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட உதயமான 36 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் விதைக்கப்பட்ட பனை மர விதைகள் 100% முளைத்துள்ளது இதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி செந்தில்ராஜ் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு பாராட்டி, நன்றி தெரிவித்துள்ளார்.
அழிந்து வரும் தமிழர்களின் தேசிய மரமான பனை மரத்தை பாதுகாக்க, நிலத்தடி நீரை மேம்படுத்த, நீர் பிடிப்பு பகுதிகளில் மண்ணரிப்பை தடுக்க, கரையை வலுப்படுத்த, சுற்றுச்சூழலை பாதுகாக்க, மக்களுக்கு பதநீர், கருப்பட்டி, கல்கண்டு, பனசீனி, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு போன்ற இயற்கையான மருத்துவ குணம் மிக்க பனை சார்ந்த உணவுப் பொருளை தொடர்ந்து வருங்கால தலைமுறையினருக்கு கிடைக்க வேண்டும். என்பதற்காக அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்கவும், புதிய மரங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தை கருத்தில் கொண்டு, சேவை மனப்பான்மையோடு, சமூக அக்கறையோடு, இதற்காக நிதி உதவி எதுவும் பெறாமல் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பனைமர விதைகளை கடற்கரை மற்றும் தீவு பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்காங்கரை பகுதியிலும் சாலை ஓரத்திலும், அரசு புறம்போக்கு இடங்களிலும், விரும்பி கேட்ட தனியார் இடங்களிளும் தொடர்ந்து பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட உதயமான 36 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மாவட்ட வன அதிகாரி அபிஷேக் தோமர் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி. செந்தில் ராஜ் இ.ஆ.ப. தலைமை தாங்கி ஒரே நாளில் 36 ஆயிரம் பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தார்கள். மேலும் இதனை தொடர்ந்து பனை விதை விதைக்கப்பட்ட இடத்தில் எந்த அளவு முளைத்துள்ளது என்பதை ஆய்வு செய்யும் பணியை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமையில் குழுவினர் இந்த பகுதியிலும் ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்போது காயல்பட்டினம் கடற்கரையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 36000 பனை மர விதைகள் விதைக்கும் பணியை துவக்கி வைத்த இடத்தில் 100% பனை மர விதைகள் முளைத்திருந்தது. இதைப் பார்த்து மகிழ்ச்சியும், ஆச்சரியமடைந்தனர். இதனை உடனே போட்டோ எடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட வன அதிகாரி அபிஷேத் தோமர் உள்பட அரசு அதிகாரிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பினார். இதனைப் பார்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட வன அதிகாரி அபிஷேக் தோமர் உட்பட அரசு அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு (வாட்ஸ் அப்) சமூக வலைதள மூலம் பாராட்டி, நன்றி தெரிவித்துள்ளனர். இந்தப் பாராட்டு எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், எங்கள் சேவை ஊக்கப்படுத்துவதாவும், இருப்பதாக இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநிலத் துணைத் ஏ.பொ. சுதாகர், தென் மண்டல தலைவர் ராம்குமார், செயலாளர் இம்மானுவேல், மற்றும் நிர்வாகிகள் உதயகுமார், முத்துக்குமார், காயல் பாலா. காயல் சிவா, சங்கர் மற்றும் கணேஷ் உட்பட சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


