தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு அமைச்சர் கீதாஜீவன் சான்றிதழ்கள் வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற SDAT கட்டணமில்லா கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
உடன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் அதிர்ஷ்டராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி அனல் சக்திவேல், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராபின், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னதுரை, விளையாட்டு பயிற்சியாளர்கள் ஜான் கென்னடி, பழனிச்சாமி, லூர்து, நிகழ்ச்சி தொகுப்பாளர் பெனிட்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


