வல்லநாட்டில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.
இந்திய இளையோர் பாரம்பரிய சிலம்பம் சங்கம் நடத்தும் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு தம்புராட்டி அம்மன் கோவில் முன்புள்ள மைதானத்தில் நடந்தது.
இந்த போட்டியை இந்திய இளையோர் பாரம்பரிய சிலம்பம் சங்க மாநிலத் தலைவர் தர்மசாஸ்தா தொடங்கி வைத்தார். இதற்காக வல்லநாடு மெயின்ரோட்டில் இருந்து மாணவ மாணவிகள் சிலம்பம் உள்பட தற்காப்பு கலைகளை விளையாடிபடி ஊர்வலமாக மைதானத்திற்கு வந்தனர்.
மாநில செயலாளர் வேல்முருகன் மாநில பொருளாளர் விஷ்ணுவர்தன், மாநில வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன், மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், மாநில துணைச் செயலாளர் ஹரிஹரன், சிலம்பாட்ட தொடக்க விழாவில் பேசினர்.
மாநில போட்டிக்கு னர்கள் கண்ணன் சுந்தரவடிவேலு மணிகண்டன் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களை சேர்ந்த யூகேஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய இளையோர் பாரம்பரிய சிலம்பு சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.


