செய்துங்கநல்லூர் அருகே உள்ளது முத்தாலங்குறிச்சி. இவ்வூரில் மிகவும் பழமையான சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பிரமாண்டமான பைரவர் உள்ளார். இவருக்கு வளர்பிறை அஷ்டமி பூஜை செய்வது சிறப்பு என்பது ஐதீகம். இதற்காக பக்தர்கள் தமிழ்நாடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வந்து பூஜை செய்கின்றனர். தற்போது இந்த கோயிலில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பக்த குழுவினர் குணா பட்டர் தலைமையில் முத்தாலங்குறிச்சி சிவன் கோயிலுக்கு வந்தது. அங்கு சிவன் சிவகாமி உள்பட பைரவருக்க சிறப்பு அபிசேகம் செய்தனர். அதன் பின் சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின் பூஜை நடைபெற்றது. இது குறித்து குணா பட்டர் கூறும் போது கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வர் ஆலயத்தில் தேய் பிறை அஷ்டமி மிக விசேசமாகும். அங்கு பைரவர் சட்டநாதர் எனும் பெயரில் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். தற்போது திருப்பணிக்காக அங்குள்ள பைரவர் பாலாலயம் செய்து வைக்கப்பட்டுள்ளார். இதனால் பக்தர்கள் வளர்பிறை அஷ்டமியில் பூஜையில் சிறப்பு தரும் முத்தாலங்குறிச்சி வீரபாண்டீஸ்வர் கோயிலில் உள்ள பைரவரை தேடி வந்து பூஜை செய்கின்றனர். இதனால் இவர்கள்களுக்கு நல் பட்ட கடன் பிரச்சனை தீருகிறது. எதிரிகள் வீழ்ச்சி அடைகிறார்கள். இதனால் நாளுக்கு நாளு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது என்று கூறினார்.
முத்தாலங்குறிச்சி சிவன் கோயிலில் திருப்பணிசெய்து கும்பாபிசேகம் செய்வதற்காக ஆரம்ப கட்ட பணிகள் நடக்கும் வேளையில் பக்தர்கள் வருகை சிவ பக்தர்களிடையே மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.


