தூத்துக்குடி மாநகராட்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.152.14 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூ.152.14 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்தை தந்திருக்கிறார்கள் தமிழ்நாடு முதலமைச்சர் . இத்திட்டம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு 8,000 வீடுகளுக்கு மேல் பயன்பெறக்கூடிய வகையில் நேரடியாக வீடுகளில் இருந்து கழிவு நீர் அகற்றப்பட்டு, சுத்திகரிப்பு செய்து அந்த வளாகத்தின் அருகில் உள்ள செடிகள், மரங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுப்புறச்சூழலை பேணி காப்பதோடு இந்த பகுதியை சுகாதாரமாக வைப்பதற்கும் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் அம்ரூத் 20 நிதியின் கீழ் மத்திய அரசின் பங்காக ரூ.45.44 கோடி, மாநில அரசின் பங்காக ரூ 41.31 கோடி மற்றும் உள்ளாட்சி பங்களிப்பு மூலம் ரூ.65.39 கோடி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இந்திட்டத்திற்கான பணி ஆணை 22.02.2024 அன்று வழங்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் இத்திட்டத்தில் அடங்கிய 5 வார்டுகளின் ஆரம்ப நிலை (2024), நடுநிலை (2039) மற்றும் உச்சகட்ட (2054) மக்கள் தொகை முறையே 37874, 46742 மற்றும் 55375 ஆகவும், அதற்கேற்ப வெளியேற்றப்படும் கழிவுநீர் அளவு நாளொன்றிற்கு முறையே 4.36, 5.38 மற்றும் 6.37 மில்லியன் லிட்டர் ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 8014 விடுகளிலிருந்து உருவாக்கப்படும் கழிவுநீர் 79.70 கி.மீ நீளமுள்ள 200 மி.மீ முதல் 450 மி.மீ விட்டம் கொண்ட இரண்டுபுர நெளிந்த (னுறுஊ) குழாய் மற்றும் ர்னுPநு குழாய்கள் 3285 இயந்திரக் குழிகள் மற்றும் கழிவு நீரேற்று நிலையம் ஆகியவற்றை கொண்ட கழிவுநீர் சேகரிப்பு கட்டமைப்பின் மூலம் அசோக் நகர், பால்பாண்டி நகர் மற்றும் நில்லேஷ் நகரில் அமையவுள்ள துணை கழிவுநீர் உந்து நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இம்மூன்று நிலையங்களிலிருந்து இருதயம்மாள்புரத்தில் அமைக்கப்படவுள்ள பிரதான கழிவு நீருந்து நிலையத்திற்கு 923 கி.மீ நீளமுள்ள வார்ப்பு இரும்பு குழாய்கள் மூலம் கழிவுநீர் உந்தப்பட்டு அங்கிருந்து 600 மி.மீ விட்டமுள்ள வார்ப்பிரும்பு குழாய் மூலம் 7.90 கி.மீ தூரத்தில் மாநகராட்சியால் தருவைக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு உந்தப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்ட பின் 200 ஏக்கர் பரப்பிலான தோட்டத்தில் விடப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் 47000 மக்கள் பயன்பெறுவர்.
அதேபோல சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவரது துறை மூலம் இந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.3,20,320/- மதிப்பிலான 55 மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், ரூ.6,76,480/- மதிப்பிலான 80 எம்பிராய்டரி தையல் இயந்திரங்கள் என மொத்தம் ரூ.9,96,800/- மதிப்பிலான தையல் இயந்திரங்களை ஒதுக்கீடு செய்து தந்துள்ளார்கள். இதில் முதற்கட்டமாக இன்று ரூ.17,072/- மதிப்பிலான 3 மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், ரூ.3,97,432/- மதிப்பிலான 47 எம்பிராய்டரி தையல் இயந்திரங்கள் மற்றும் திருநங்கைகளின் சுயதொழில் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 20 திருநங்கைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தலா ரூ.50,000/- வீதம் ரூ.10 இலட்சம் நிதியுதவியும் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.4,00,000/- வழங்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இத்திட்டத்pன் வாயிலாக வீடு இழந்தவர்கள், வீடு பழுதடைந்தவர்கள் பயன்பெறலாம். இத்திட்டம் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கும், சரிசெய்வதற்கும் வழிவகுக்கிறது. மழைவெள்ளதால் மடிக்கணினி பாதிக்கப்பட்ட 50 மாணவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு புதிதாக மடிக்கணினி வழங்கப்பட்டது. இதில் விடுபட்ட மாணவர்கள் கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும் வழங்கப்படும். அரசின் நலத்திட்டங்களை, வாய்ப்புகளை மக்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பயன்படுத்த வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசின் திட்டங்களில் வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் இதுவரைக்கும் இல்லை. முதன்முதலாக நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தருகிற இத்திட்டத்தில் நம்முடைய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பங்கும் உண்டு. அதுபோல பழுதான வீடுகள் பராமரிப்பு, ஆடு, மாடு இழந்தவர்களுக்கு நிவாரணம், சேதமான பயிர்களுக்கு நிவாரணம் என அனைத்திற்கும் நிவாரணம் வழங்கியுள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் நம்முடைய மாநகரத்திற்கு சாலைகள், மழைநீர் வடிகால்கள், பாதாள சாக்கடை திட்டம், நகர்நல மையம் என்றெல்லாம் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி இன்றைக்கு மாநகரமே வளர்ந்து வரும் நிலையை உருவாக்கியுள்ளார்கள். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
முன்னதாக சமூக நலத்துறை மூலம் 6 பேருக்கு தையல் இயந்திரங்கள், 20 திருநங்கைகளுக்கு தொழில் தொடங்க தலா ரூ.50,000/- மானியம், முழுமையாக வீடுகள் சேதமடைந்த 11 பேர் மற்றும் பகுதி சேதமடைந்த
08 பேர் ஆகியோருக்கு நிவாரணம், தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 21 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் வழங்கினார்.
முன்னதாக கருங்குளத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலைய கட்டிடத்தையும், திருச்செந்தூர் நகராட்சி தோப்பூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தையர் இல்லாத குழந்தைகளுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்பையும், வ.உ.சி. கல்லூரி அருகிலுள்ள பூங்கா படிப்பக வளாகம், வார்டு எண்.10 முத்துகிருஷ்ணாபுரத்தில் நகர்நல அலுவலகம் ஆகியவற்றை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் நகரத்தில் எஸ்இபிசி பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சமுதாய பொறுப்பு நிதியில் இருந்து ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியம், முத்தையாபுரம் ஊராட்சியில் எஸ்இபிசி பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சமுதாய பொறுப்பு நிதியில் இருந்து ரூ.7.43 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திறந்தவெளி கலையரங்கம் ஆகியவற்றினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகளில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செ.அமிர்தராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், தலைமைப்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மதுரை மா.அயினான், தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் தொ.நிர்மல்ராஜ்,திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி , நகராட்சி துணை தலைவர் எ.பி.ரமேஷ் , திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் கண்மணி , திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரா.ரெங்கசாமி, மேற்பார்வை பொறியாளர் கழிவு நீர் அகற்றும் வட்டம் மதுரை ச.கலைச்செல்வி, தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் ராஜன், தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் ஓ.ராஜாராம், தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர்கள் பிரின்ஸ், சரவணன், எஸ்இபிசி பவர் பிரைவேட் லிமிடெட் செயல் நிர்வாக அலுவலர் எஸ்.நரேந்திரா, முத்தையாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் உமையணன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


