குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகளுக்கு இலவச தையல் பயிற்சி துவக்க விழாவில் பெண் குழந்தை திருமணத்தையும்,பள்ளி இடைநிறுத்ததையும் தடுக்க,
வறுமையை ஒழிக்க, பெண்கள் தொழில் முனைவோராக மாற வேண்டுமென மாவட்ட அதிகாரி சு. ரதிதேவி கூறினார்
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகள் தொழில் பயிற்சி பெற்று மறுவாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் துவக்க விழா சமுதாய நல கூடத்தில் வைத்து நடைபெற்றது.
துவக்க விழாவிற்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர். எஸ். ஜே. கென்னடி தலைமை தாங்கினார்.
புன்னக்காயல் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா,கிராம கமிட்டி தலைவர் அமீல்சன், வார்டு உறுப்பினர் சுரேஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை தூத்துக்குடி மாவட்ட அதிகாரி சு.ரதிதேவி கலந்துகொண்டு தையல் பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது :- குழந்தைத் திருமணங்கள் நடப்பதற்கும், பெண் குழந்தைகள் பள்ளி இடைநிறுத்தமாவதற்கும் குடும்பத்தில் உள்ள வறுமையே முக்கிய காரணம். வறுமையை ஒழிக்க பெண்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும்.பெண்கள் தொழில் முனைவராக மாறினால் குடும்பம் பொருளாதார அடையும் .இதனால் குடும்பத்தில் வறுமை ஒழியும்.வறுமை ஒழிந்தால் குழந்தை திருமணம் மற்றும் பள்ளி இடைநிறுத்த தடுக்கப்படும். மேலும் பெண்கள் முன்னேற்றமடைய கல்வி கற்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், பொருளீட்ட வேண்டும்,பெண்கள் சுய சிந்தனையாளராக மாற வேண்டும், மூடநம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டும்,பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும், ஜாதி மதமென்ற மதில்சுவர்களை தகர்க்க வேண்டும் சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என மாவட்ட அதிகாரி சு.ரதிதேவி கூறினார்.
முன்னதாக தையல் பயிற்சி ஆசிரியர் எஸ் பானுமதி அனைவரையும் வரவேற்றார். இப்பயிற்சி தொடர்ந்து 3 மாதம் நடைபெறும் இதில் 13 வயது முதல் 20 வயது வரையுள்ள குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகள் 17 பேர் மட்டும் பயிற்சியில் சேர்க்க பட்டுள்ளனர். .இப்பயிற்சியில் கர்ச்சீப், தலையணை உறை, நிக்கர், பெட்டிகோட், பாவாடை வகைகள், மாடல் ஹவுன் வகைகள், மாடல் பிளவுஸ் வகைகள், சுடிதார் வகைகள், போன்றவைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது பயிற்சிக்குப் பின் அரசு சான்றிதழ் வழங்கப்படுவதோடு இலவச தையல் இயந்திரங்கள் பெற வழிவகை செய்யப்படும்.முடிவில் தையல் பயிற்சி மாணவி அபர்ணா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தையல் பயிலும் குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் மேலும் மதர் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


