கருங்குளம் அருகே உள்ள ஆறாம்பண்ணைக்கு நெல்லையில் இருந்து டவுண் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆறாம்பண்ணையில் நடந்த சதக்கப்துல்லா அப்பா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்கு வருகை தந்த பாளையங்கோட்டை எம்.எல்.எ அப்துல்வாகப், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ அமிர்த்தராஜ் ஆகியோரிடம் பொதுமக்கள் சார்பில் பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் கோரிக்கை வைத்தார்.
இவ்வூருக்கு வருகை தந்த கனிமொழி எம்.பி.யிடமும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது.
இன்று காலை ஆறாம்பண்ணைக்கு புதிய டவுண் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் தினமு காலை 5.30,7.50, 10.30, 03.15, 5.55, 8.35 ஆகிய நேரங்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ் கருங்குளம் , செய்துங்கநல்லூர், பாளை மார்க்கட், நெல்லை சந்திப்பு வழியாக நெல்லை டவுனை சென்றடையும். இரவு நேரத்தில் டவுணில்இருந்து 9.30 மணிக்கு கிளம்பும் பேருந்த இரவு 10.28 மணிக்கு ஆறாம்பண்ணையில் வந்து தங்கி, மறுநாள் காலையில் கிளம்புகிறது.

இந்த பேருந்தை ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆறாம் பண்ணை ஊராட்சி துணைத்தலைவர் அப்துல் கனி ஆறாம் பண்ணை முகைதீன் பள்ளிவாசல் துணைத் தலைவர் அப்துல் கனி. காங்கிரஸ் பிரமுகர் ஸ்டாலின் அரபாத் நகர் பள்ளிவாசல் தலைவர் அன்வர்ஷா , வார்டு உறுப்பினர் இப்ராகீம், மக்கள் சேவகர் காஜா முகைதீன், அப்துல் வாகப், அப்துல் கரீம், அப்துல் ரகுமான், அப்துல் சமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பேருந்து ஊருக்கு வரஅனைத்து ஏற்பாடுகளையும் செய்த மக்கள் பிரதிநிதிகளுக்கும், போக்குவரத்து அதிகாரிக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.


