சிறப்பு பெற்ற பாபநாசத்தில்,
தலையணைக்குச் செல்லும்
வழியில், ஐயாகோயிலின்
கிழக்குப் பகுதியின் முக்கோண
நதி சதுக்கமே, சித்தர்கள் சங்க
தீர்த்தமாகும். இப்பகுதியைச்
சுற்றி வற்றாத வளமையான
தாமிரபரணி நதி பாய்கிறது.
தவிர, உயரத்திலிருந்து பார்த்
தால் இவ்விடம் வேல் வடிவில்
இருக்கும், அதோடு மூன்று சூல வடிவில் நதி இவ்விடத்தில்
பிரிந்து வருதைப் பார்க்க
முடியும். மலைகளைக் கடந்து
வரும் தாமிரபரணி சமதள
பூமியில் இறங்கும் முதற்
பகுதியே இந்த இடம் தான்.
அக்காலங்களில்,
அகத்தியர் வீற்றிருக்கும் பொதிகைமலைக்கு, தரிசன வழிபாட்டிற்காகச் செல்லும்
சித்தர்கள், பாபநாசத்தில்
அருள்பாலிக்கும், ஸ்ரீஉலகம்மை
சமேத ஸ்ரீபாபவிநாசர் மற்றும்
கோயிலின் பின்புறமுள்ள
முக்களாலிங்கரை வழிபட்டு
விட்டு, இவ்விடத்தில் தான்
சங்கமிப்பர். கோடைகாலத்தில்
மட்டுமே பொதிகைமலை
வழிபாடு சித்தர்களுக்குச்
சாத்தியமாகும்.
காரணம் மற்றைய காலங்களில்
அதிக மழை , கடும் பனிபொழிவு
மிருகங்களின் தொல்லை என
இவைகளால்பொமதிகைமலைக்குச் செல்ல இயலாது.
பல தேசங்களிலிருந்து வரும்
சித்தபுருஷர்களும், ஞானிகளும் இவ்விடத்தில் தான் முதலில்
தங்கி சத்சங்கம் செய்வர். இவர்
களின்வருகையைக் கேள்விபட்டு
பல ஊர்களிலிருந்து பக்தர்களும்
பொதுமக்களும் தம் நோய்களை குணமாக்கிக் கொள்ள இங்கு
வந்து சித்தர்களை நாடுவார்கள்.
சித்தர்களும், ஞானிகளும் மக்களின் நோய்களைத் தீர்த்து
நல்லாசிவழங்குவர்.
குறிப்பாக இப்பகுதியில்
சித்தப்பிரமை பிடித்த நோய்க ளையே பெரும்பாலும் தீர்த்து வைத்துள்ளனர்.
மலை ஓரங்களிலும், இப்பகு
தியிலும் கிடைக்கும் மூலிகை
களைக் கொண்டு
இப்பகுதியின் நதியோரமுள்ள கற்பாறைகளில் குழிபோல்
உள்ள பண்ணைகளில் அம்மூலிகைகளை இடித்து மருந்தாக்கி பக்தர்களுக்கு
கொடுத்தும்,தப்பளம் இட்டும் அவர்களின் வியாதிகளைக் குணமாக்கி உள்ளனர்.
இன்றும் இப்பகுதியைச் சுற்றிலும் அந்தக் கற்குழிகளைக் காணலாம். பெரும்பாலான கற்குழிகள் நதியோரமுள்ள
தாளைச் செடிகளுக்கிடையே
உள்ளது .அதோடு கற்பாறைக ளில் செதுக்கப்பட்டப் புடைச்
சிற்பங்களும்,காலம்காலமாக
வந்தபெரும் வெள்ளத்தால்
அழிந்துவிட்டன. சித்தர்கள்
இங்கு சில தினங்கள் தங்கி
விட்டு, அருகிலுள்ள மலை
வழியாக பொதிகைமலைக்கு
சென்று அகத்தியரை வழிபட்
டுள்ளனர்.
தலையணையிலிருந்து
வரும் கால்வாய் பாலத்தின்
அருகிலிருந்து மேல்நோக்கி
உறுதியான நீண்ட படிக்களை
இன்றும் காணலாம். மலை
யின் அடிவாரத்தில் ,ஒரு காலத்தில் ஒரு கல் மண்டபம் இருந்ததுள்ளது. பராமரிப்பின்றி
இடிந்துபோயிற்று.
அதற்கானஅடையாளங்களை
இன்றும் காணலாம். தவிர
இந்தவழியாக படிவழி, மேலே
சென்றால் தற்போதுள்ள வளைந்த ரோடு வரும்.
ரோட்டின் வளைவுப் பகுதி
யிலிருந்து பார்த்தால் அகத்தி
யர் அருவி தெரியும். அகத்தியர் அருவிப் பகுதியை ஐந்தலை அருவி என பழைய காலத்தில்
குறிப்பிடுவர். அப்பகுதிகளிலும்
கற்பாறைகளில் கற்குழிகள்
நிறைய உள்ளன.அவற்றிலும்
சித்தர்கள் மருந்தை இடித்து மக்
களுக்கு கொடுத்து உள்ளனர்.
மேலே வளைவு ரோட்டுப்
பகுதியிலிருந்து சுமார் 20 அடி
தூரத்தின் வடக்கில் சிறப்பான
கல்மண்டபம் ஒன்றினை இன்றும் காணலாம். அக்கால
மன்னனர்கள் இம்மண்டபங்க
ளின் மேல்தளங்களில் கொட்டும்
முரசினை வைத்து , ஒலி எழுப்பி ஒலிகளின் சமிக்கை மூலம்
எதிரிகளின் ஆபத்தினை
அரசனுக்கும் மக்களுக்கும்
தெரிவிக்க பயன்டுத்தியதாக வரலாறு உண்டு. தற்போது
மின்சாரம் எடுக்கும் அந்த
டாப்சிலிண்டர் குழாய்பகுதியின் பரப்பைத் தான் கொட்டந்தளம்
என்பர். முரசு மூலம் செய்தி
சொன்ன இடம் ஆதலால் இது
கொட்டும்தளம் என்றும்,
மருவி கொட்டந்தளமாயிற்று.
இதற்கு மேல் காரையாறு
மலை பகுதியில் பாண்டியன்
கோட்டை உள்ளதைக் இன்றும் காணமுடியும்.
ஆக வரலாறும், ஆன்மீகமும்
இணைந்த ஆரம்ப இடமே
இந்த சித்தர்கள் சங்கம் தீர்த்தம்
தான்.பாபநாசத்தில் மற்ற
பகுதிகளை விடஇப்பகுதியில்
தண்ணீர் மிக மிகக் குளிர்ச்சி
யாகக் காணப்படும்.
இப்பகுதியின்
நதியோரம் தாளம்பூ செடிகளும், கோரை, தர்பை, எழுத்தாணி பூண்டு, வல்லாரை, கரிசாலை
புலாத்தி,சங்கம்குப்பி,தழுதாளை முடக்கத்தான்,சேம்பு மற்றும் இதர
மூலிகைகளும் தான் இக் குளிர்ச் சிக்கு காரணமாகும்.
இப்பகுதியில் அளப்பரிய
வான்சக்தியை (Cosmic Energy)
இறை உணர்வால் கண்டு
உணர முடியும்.
அதோடு இப்பகுதியின் கற்
கள் எல்லாம் வழுவழுப்பாகவும்
சிவலிங்க வடிவில் சிறியதும்
பெரியதுமாய், அதோடுகூழாங்
கற்களாய் காண்பது அதிசியமே.
முக்கியமாக வேகமாக வரும் நீர்
இப்பாறைகளிலும், கூழாங்க
ளிலும் பட்டுத் தெரிக்கும் போது
நீரின் அடர்த்தி கனம் குறைந்து
மெலிதாக ஓடும் வேளையில்
நீரில் ஆக்ஸிசன் படர்ந்து, ஆற்ற
லோடு வருவதால், குளிப்பவர்
களுக்குக் குளிர்ச்சியையும்
புத்துணர்ச்சியையும் தருகிறது.
இப்பேர்பட்ட புனிதமுள்ள
இவ்விடத்தின் மகிமை தெரியா
மல் பக்தர்களும், பொதுமக்களும்
தம் துணிகளையும், குப்பைக
ளையும், இறந்தவர்களின் துணி
களையும், தினமும் இப்பகுதியில் போடுவது தான் மிக வேதனை
அளிக்கிறது.
வரலாற்று சிறப்புமிக்க இப்
புனிதமான இடத்தில், சுவடே
தெரியாமல் சிதைந்து போன
(சித்தர்கள்சங்கமத்தீர்த்தக்கட்டம்)
படித்துறையை இறை சித்தத்தில்
அதை புணரமைத்து புதிய
வடிவில் நண்பர்களின் துணை யுடன் 2022ல் ஒரு படித்துறையாக
கட்டப்பட்டுள்ளது. பெரும்பாக்கி
யமே. (தலையணை போகும்
பகுதியின் ஏற்றத்தில்)
குளிப்பதற்கு பாதுகாப்பான இப்
பகுதியில், கட்டப்பட்ட சிறு படித்
துறையின் உதவியால் மக்கள் இங்கு தினம் குளித்து விட்டு
இறைவழிபாடு செய்து வருவது மகிழ்ச்சியே.
இப்புனித இடத்தின் அருமை பெருமைகளை 110 வயது வரை
தவமாய் பாபநாசத்திலேயே
சித்தர் போல் வாழ்ந்து கழித்த
திரு. S. முத்தையா சுவாமிகள் சொன்னது மிக மிக பிரமிப்பாக இருந்தது. வியாசர் எழுதிய தாமிரபரணி மகாத்மியம் என்ற நூலிலும் இவ்விடத்தின்
குறிப்புகள் உள்ளது.
தொகுத்து எழுதியது…
கிரிக்கெட்.B.மூர்த்தி
Asst. Director of Statistics (Rtd)
விக்கிரமசிங்கபுரம்.
திருநெல்வேலி Dt.


