ஆழிகுடி வெங்கிடாசலபதி திருக்கோயில் கடந்த ஆண்டு மிக மோசமாக இருந்தது. கட்டிடம் இடிந்து விழுந்து விடுமோ என பயந்து கொண்டிருந்தனர். நான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தேன். பல்வேறு வகையில் உள்ளூர் பிரமுகர்களும், கோயில் சம்பந்தப்பட்ட வெளியூர் மக்களும் முயற்சி எடுத்து வந்தனர். இந்த சமயத்தில் தான் எனது நண்பரும் ஆழ்வார்திருநகரி அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியுமான அஜீத் அவர்கள் வருகை தந்தார்கள். கோயிலுக்கு திருப்பணி உபயதாரர்கள் கிடைத்துள்ளனர். கோயில் திருப்பணி செய்ய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. திருப்பணி செய்யப்போகிறோம் என்றார். புகைப்படம் எடுத்து அதை ஆவணப்படுத்தும் பொறுப்பை நீங்கள் இலவசமாக செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நானும் சந்தோசமாக சம்மதித்தேன். எனது சிஷ்யன் சுடலைமணிச்செல்வன் தொடர்ந்து புகைப்படம் எடுத்துக்கொடுக்க, ஆழ்வார்திருநகரி ஜீயர் சுவாமிகள் திருப்பணியை துவக்கி வைக்க திருப்பணி வேகமாக நடந்தது. கிட்டத்தட்ட 6 மாதத்தில் இவ்வளவு பணியும் நடந்து முடிந்துள்ளது. கடந்த 23.03.2023ல் பழைய நிலமையை புகைப்படம் எடுத்தோம். 23.05.2023 அன்று கோயில் திருப்பணி ஆரம்பித்தது. 24.05.2023 அன்று பாலாலயம் நடந்தது. தற்போது 13.11.2023 அன்று கோயிலுக்கு சென்றிருந்தேன். அப்போது எடுத்த புகைப்படத்தினையும் அருகில் பிரசுரம் செய்துள்ளேன். ஆழிகுடி பணியை செவ்வன செய்த நிர்வாக அலுவலர் அஜீத் மற்றும் அவருடன் உழைத்த இராமனுசம் சுவாமி அவர்களும், சர்குணவதி அம்மா அவர்களுக்கும், உதவிய அனைத்து உபயதாரர்களுக்கும் , அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறநிலையத்துறைக்கும் நன்றி. மேலும் சுற்றப்புறச்சுவர் கட்ட, கும்பாபிசேகம் செய்ய உபயதாரர்கள் தேவை. வாய்ப்பு இருந்தால் 9940464754 என்ற எண்ணில் தொடர்ப்பு கொண்டு திருப்பணிக்கு உதவுங்கள்.- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


