விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட திமுக பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமை வகித்தார்.
விளாத்திகுளம் தேர்தல் பார்வையாளர் மதுரை முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். மேலும் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதகண்ணன், காசிவிஸ்வநாதன் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, மருதுபாண்டியன் உட்பட பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.


