எட்டயபுரம் அருகே பைக் மீது லாரி மோதியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சுப்பா நாயக்கர் மகன் சின்ன சங்குசாமி (60). விவசாயி. இவர் நேற்று மாலையில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள கீழஈராலில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
விளாத்திகுளம் புறவழிச்சாலையை அவர் கடக்க முயன்ற போது மகாராஷ்டிராவில் இருந்து வெங்காய லோடு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோ்க்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிரபாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் அதேஇடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான எடப்பாடி வெள்ளாண்டி வலசுபுது தெருவை சேர்ந்த மணி மகன் சக்திவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


